பக்கம்:எனது பூங்கா.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் அழகா ? பெண் அழக்ா ? தினந்தோறும் பழகும் மாட்டைப் பார்ப்போம். காளேதான் அழகு. வண்டியிலும் ஏரிலும் பூட்டும் காளைகளைக் கூற வில்லை. கோயிற் காளைகள் தான் உண்மையான காளைகள். அவைகளைப் பார்த்தால்போதும், என் கூற்றின் உண்மை விளங்கும். காட்டிலிருந்து கொண்டுவந்துள்ள யானையைப் பார்த் தாலும் சிம்மத்தைப் பார்த்தாலும் ஆண் அழகு என்பதே உறுதியாகும். மானில் எது அழகு? கலைமான்தான். அத ல்ை தானே அதன் கொம்பை நாம் நம்முடைய வீட்டில் அணி பொருளாக உபயோகித்து வருகின்ருேம். ஆகவே இயற்கையானது, ஆண் அழகா பெண் அழகா என்னும் கேள்விக்குக் கவிஞர்களைப் போலவும் மற்றவர் களைப் போலவும் விடை யிறுக்காமல் வேறு விதமாகவே இருக்கின்றது. அப்படி மற்ற ஜீவ சிருஷ்டிகளில் ஆணே அழகாயிருந்தால் மக்களிடையே மட்டும் பெண் அழகா யிருக்க வேண்டிய காரணம் என்ன? இந்தக் கேள்விக்கு மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வர்கள் மக்கள் அல்லர். பிற ஜீவ சிருஷ்டிகளே. நாம் அவற்றைப் பார்த்து அழகுணர்ச்சியின் காரணமாக அவற் றுள் ஆண்தான் அழகு என்று கூறுகின்ருேம். அதேபோல் அவைகளிடம் மக்களைப்பற்றிக் கேட்டால் அவைகளும் ஆணே அழகு என்று கூறுமேயன்றிப் பெண்ணேஅழகு என்று கூரு. ஆண் மகன்தான் மீசை தாடி முதலியவற் ருேடு கம்பீரமாகத் தோன்றுகிருன். அதனலேயே அவ னேக் 'காளை' என்றும் ' சிம்மம்' என்றும் கூறுகிருர்கள். சீதைதேவியும் இராமபிரானுேடு காட்டிலிருந்தபோது —188—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/140&oldid=759335" இலிருந்து மீள்விக்கப்பட்டது