பக்கம்:எனது பூங்கா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது கார்

 எனது காரில் கண்டுகளிக்க இனிய காட்சிகள், மனத்தை மகிழ்விக்கும் இனிய இசை, ஸ்நானம் செய்யவும் தாகம் தீர்க்கவும் தெளிந்த சுத்தமான நீர் இவையெல்லாம் உண்டு. மேலும் என்னோடு பேசிப் பழகி ஆனந்தமாய்க் காலங்கழிக்க அநேக கோடி நண்பர்களும் உண்டு. அந்த நண்பர்கள் எனக்கு நாள்தோறும் காட்டும் அற்புத விநோ தங்கள் பல. உண்ணத் தேவையானவை அனுபவிக்கத் தேவையானவை எல்லாம் அங்கே அளவின்றிக் கிடைக்கும்.
 உங்கள் கார்கள் மணிக்கு எத்தனை மைல்கள் ஒடும்? அறுபது, எழுபது மைல் வேகத்தில் ஒட்டினால் உடனே ஆச்சரியம் என்று வியந்துகொள்வீர்கள் ! அப்படியானால் என்னுடைய கார் மணிக்கு எழுபது அல்ல - எழுபது ஆயிரம் மைல் ஒடும் என்று கூறினால் எவ்வளவு ஆச்சரியம் அடைவீர்கள் !
 சாதாரணமான கார்கள் எப்பொழுதும் ஒரே வேகத் தில் ஒடமாட்டா. தவிர அவைகள் இயங்குவதற்குப் 'பெட்ரோல்' தேவை. அதிவேகமாய் ஓடினால் வேறு கார்க ளோடு மோதினாலும் மோதும். அப்படி அதிவேகமாய் ஒட்டச் சாமர்த்தியமுள்ள சாரதியும் வேண்டும். ஆனால் என்னுடைய காரோ - எப்பொழுதும் ஒரே வேகமாய், எழுபது ஆயிரம் மைல் வீதம், பெட்ரோல் ஒரு துளிகூடத் தேவையில்லாமல் ஒடும். என் காருக்குச் சாரதி இல்லை; சாரதி இல்லாமல் ஒடக்கூடிய கார் அது. வேறு கார்க ளோடு மோதாது. அது ஓட ஆரம்பித்து எத்தனையோ லக்ஷ வருஷங்கள் ஆகிவிட்டனவே. ஆயினும் இதுவரை எவ்வித விபத்தும் நிகழவில்லை.

—18–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/17&oldid=1299031" இலிருந்து மீள்விக்கப்பட்டது