பக்கம்:எனது பூங்கா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது கார்

 இவ்வளவு விரைவாக ஒடுகிறதே - என்ஜினில் ஏதே னும் சப்தமுண்டா? சிறிதும் இல்லை. இத்தனை வருஷங்க ளாக ஓடிவருகிறதே - எங்கேனும் 'கிரீச்' என்ற ஒசை யுண்டா? ஒரு சிறிதும் கிடையாது. சப்தம் சிறிதுகூட இல்லாத காரை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள் - பார்க் கவும் மாட்டீர்கள். 
 இப்படி சப்தமில்லாமலும், இவ்வளவு விரைவாகவும் ஓடுவதானால் - அது ஒடுகிற ரஸ்தா எப்படிப்பட்டதோ என்று நினைக்கலாம். ஆகா, இப்பொழுதுதான் அறிந் தேன். எனது வாகனத்தைக் கார் என்று அழைப்பது தவறு. கார் என்றால் அது ஒட ரஸ்தா வேண்டுமே! எனது வாகனம் எந்த ரஸ்தாவிலும் ஒடவில்லை. அந்தரத்தில் அல்லவோ பிரயாணம் செய்கிறது ! அதனால் அதைக் கார் என்று அழையாமல் ஆகாயவிமானம் என்று அழைக்கலாம் அல்லவா ?
 ஆனால் அப்படிச் சொல்வதும் தவறாகமுடியும். ஆகாய விமானம் ஆகாயத்தில் - காற்றில் - அல்லவோ பறக்கும் ! என்னுடைய வாகனம் விரைந்து பறக்கும் வழியில் காற்று என்பதே கிடையாது. உலகில் காற்று இல்லாத இடம் உண்டோ ? கிடையாது. ஆனால் என் வாகனம் காற்றில் லாத வெட்டவெளியில்தான் செல்கிறது. இது மிக அற்புத மல்லவா?
 என் வாகனம் - முன்போல் கார் என்று சொல்வதற் கில்லை - மணிக்கு எழுபதினாயிரம் மைல் வீதம் இடை விடாது ஓடிக்கொண்டிருக்கிறது என்று கூறினேன். அது மட்டுமன்று. அந்தரத்தில் அவ்விதம் போகும்பொழுதே

—19–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/18&oldid=1299042" இலிருந்து மீள்விக்கப்பட்டது