பக்கம்:எனது பூங்கா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



3. எனது தோழன்

 நாம் ஒவ்வொருவரும் சில அல்லது பல நண்பர்களைப் பெற்றிருக்கிறோம். சாதாரணமாக நண்பர்கள் வேறு, நாம் வேறு அல்லவா? நண்பரும் நாமும் ஒன்றே, எவ்வித வேற்றுமையும் இல்லை என்று கூற முடியுமோ? உயிருக் குயிரான நண்பர் என்று கூறிக்கொள்ளலாம், ஆனால் அங்கும் பேதம் பிறவாமல் இருந்துவிடாது.
 காதல் நட்பின் ஒரு வகை; நட்பில் ஒற்றுமை முதிர்ச்சி தோன்றுமிடம் காதல் என்று கூறுவர். காதலர் ஈருடல் ஒருயிர் என்று கூறி மகிழ்வர். சில சமயங்களில் காதலைப்பற்றிக் கற்பனை கூறும் கவிஞர்கள் காதலிடையே காணும் நட்பு 'உடம்போடு உயிரிடை யன்ன' தன்மை யுடையது என்றும் கூறத் துணிந்துவிடுவர். ஆனால் எனக் கும் என் தோழனுக்குமுள்ள நட்பு ஒன்றே உண்மையில் உடம்புக்கும்உயிர்க்கும் உள்ள நட்பை ஒக்கும்என்று தைரிய மாய் கூற இயலும். எனக்கு ஓர் உடல் அவனுக்கு வேறு உடல் என்பதில்லை. அதுபோல் எங்கள் இருவர்க்கும் உயி ரும் ஒன்றே. ஓருடல் ஓருயிர்உடைய நண்பர்கள் நாங்களே!


-22-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/21&oldid=1299064" இலிருந்து மீள்விக்கப்பட்டது