எனது தோழன்
வேடிக்கைகள், விசேஷமான சங்கீதங்கள் எல்லாம் உள. ஆனால் நாம் அனுபவிக்க முடியாவிட்டால்? அந்த நிலைமை தான் எனக்கு என் தோழன் இல்லாவிட்டால் அமையும்.
என் தோழன் எப்படி நடந்துகொள்கிறானோ அதைப் பொறுத்தே என் இன்பங்களும் துன்பங்களும் ஏற்படுகின்றன. ‘இன்பமும் துன்பந்தானும் உள்ளத்தோடு இயைந்ததன்றே’ என்று கம்பர் எளிதாகக் கூறிவிட்டார். உள்ளத்தோடு இயைந்ததோ, உடம்போடு இயைந்ததோ அதைப் பெரியார்கள் ஆராயட்டும். என் தோழனோடுதான் என் இன்பதுன்பங்கள் இயைந்துள என்னும் உண்மையையே நான் இங்கு வற்புறுத்துகிறேன்.
என் தோழன் என்ன உண்கிறானோ, என்ன பருகுகிறானோ, என்ன பயில்கிறானோ, என்ன அணிகிறானோ அவை எல்லாம் என்னிடம் நன்மையோ தீமையோ விளைவித்து விடும். என் தோழன் உணவு சாத்வீகமானதாயிருந்தால் என்னையும் சாத்வீகமானவன் என்று யாரும் கூறிவிடுவர். என் தோழன் மாறுபடும் உணவு உண்டுவிட்டால் உடனே நானும் நோயால் வருந்தவேண்டியதே. என் தோழன் கட்குடியனானால் நானும் வெறியனே. என் தோழன் தேகாப்பியாசம் செய்துவந்தால் என் தேகமும் வைரமாய்விடும், என்னையும் பயில்வான் என்று கூறிவிடலாம். என் தோழனின் பழக்க வழக்கங்கள் எல்லாம் என்னையும் பாதித்து விடும். என்னை உயர்ந்தவனாக்கவும் தாழ்ந்தவனாக்கவும் என் தோழனுக்குச் சக்தி உண்டு.
என் தோழனுக்கு இந்தச் சக்தியிருந்தால் எனக்கும் அவ்விதச் சக்தி உண்டு. நான் எண்ணங்கள், இச்சைகள், இன்பங்கள், துன்பங்கள், சோர்வுகள், கவலைகள் முதலி
–27—