பக்கம்:எனது பூங்கா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது தோழன்

தத்துவ ஞானிகள் நாம் இருப்பதும், வாழ்வதும், நடப்ப தும் கடவுளிடத்திலேயே என்று வேதாந்தங் கூறுவர். ஆனால் நானே என் தோழனிடத்திலேதான் வாழ்கின்றேன். எனக்கு ஆதாரம் அவனே என்று துணிகரமாய்க் கூறு வேன். தத்துவ ஞானிகள் என் கூற்றை மறுக்கட்டும் ! ஆனால் அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்த திருமூலரிடம் முதலில் யோசனை கேட்டுக்கொண்டு மறுக்கும் யோசனை யில் இறங்கட்டும்.

 அவனே-என் தோழனே-எனக்கு உயிர்நிலை என்பதால் நான் அவனை எவ்வளவு கண்ணுங்கருத்துமாக வளர்த்துப் பாதுகாத்து வரவேண்டும் என்பது சொல்லாமலே விளங் கும் அல்லவா? அஸ்திவாரத்தில் ஒரு சிறு கல்லைப் பிடுங்கி னாலும் அரண்மனை உடனே விழுந்துவிடும். அதனால் அவ னுடைய நலத்தில் நான் கண்ணுங் கருத்துமாயிருக்கவேண் டும். அதனாலேயே ஐரோப்பாவிலுள்ள கிரிஸ் தேசத்தில் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே என் தோழனுக்குப் பெரு மதிப்புத் தந்து வந்தனர்.
 இவ்வளவு அபூர்வமான, இவ்வளவு அத்யாவசியமான தோழனே நான் எப்பொழுது பெற்றேன் ? எப்பொழுது நானும் அவனும் தோழமை கொண்டோம்? உலகில் குழந்தை பிறக்கின்றதே, இதுபோல் நானும் பிறந்ததாகக் கூறியிருப்பார்களே, அப்பொழுதே நாங்கள் இருவரும் இணைபிரியாத தோழர்கள். 
 உலகில் நட்பு என்பது என்றும் அழியாதது என்று பெரியோரும் கவிஞரும் சிறப்பித்துக் கூறுகிறார்கள். அதன் உண்மை ஆராயாமலே விளங்கும். ஆனால் உலகில் பிறத் தல், வளர்தல், இறத்தல் மூன்றும் தினந்தோறும் சர்வ

—30—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/29&oldid=1299122" இலிருந்து மீள்விக்கப்பட்டது