பக்கம்:எனது பூங்கா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது தோழன்

சாதாரணமாய்க் காணும் விஷயங்கள். ஆதலால் எங்கள் நட்பும் ஒரு காலத்தில் அழியவே வேண்டியிருக்கும். இவ் வித நட்பு நான் மட்டுமே அடைந்திருக்கவில்லை. என்னைப் போல் இருநூறு கோடி மக்கள் பெற்றிருப்பதாகவும் கேள்வி. இதற்கு முன்னும் கோடானுகோடிப் பேர் பெற் யிருந்ததாகவும் சரித்திரங்கள் கூறுகின்றன. அவர்களுக்கு ஒரு விதி, எனக்கு வேறு ஒரு விதியா ?

 ஆனால் மறுபடியும் நான் ஒரு தோழனைப் பெறு வேனோ ? இந்த ஆராய்ச்சியில் புகுந்துவிட்டால் இந்த வியாசத்திற்கு முடிவே இருக்கமாட்டாது. ஆகவே இதை இவ்வளவிலேயே முடித்துவிடுவது நல்லது.

-]★[-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/31&oldid=1299132" இலிருந்து மீள்விக்கப்பட்டது