பக்கம்:எனது பூங்கா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது நண்பர்கள்

என்பது உண்மையே. ஆயினும் சில சமயங்களில் தற் பெருமை நியாயமானதாகவும் அவசியமானதாகவும் இருக் கும் என்பதை மறுக்க இயலாது. பிறர் என்னைப் பெருமைப் படுத்தவேண்டும் என்பதற்காக நான் என் நண்பர்களைப் பற்றி எழுதப் புகவில்லை. இவர்களின் நட்பை யாவரும் பெறவேண்டாமா என்று கேட்பதே என் நோக்கமாகும்.

 எனது நண்பருள் விசேஷ அந்தஸ்துடையவர்களைப் பற்றியே எழுத விரும்புகிறேன். அவர்களிலும் பல வகுப்பி னர் உளர். அவர்களில் பூலோகவாசிகளைப் பற்றியே இங்கு எழுதப்போகின்றேன். ஏனெனில் கந்தர்ப்பர், இயக்கர், சித்தர் முதலியோருள்ளும் எனக்கு நண்பர்கள் உளர்.
 இந்தியா, பர்மா, மலேயா, இலங்கை ஆகிய இடங் களில் மட்டுமே எனக்கு நண்பர்கள் இருக்கக்கூடும் என்று எண்ணவேண்டாம். ஐரோப்பாக்கண்டத்தில், இங்கிலாந்து முதல் ருஷியா வரையும், நார்வே முதல் இத்தாலிவரையும் என் நண்பர் உளர். அமெரிக்காவிலும் பலர் உண்டு. ஆசியா கண்டத்தில் அரேபியா, பாலஸ்தீனம், பாரசீகம், சீனம், ஜப்பான் முதலிய தேசங்களில் சிலர் உளர். சுருங்கச் சொன்னால் எனக்கு நண்பர் இல்லாத எந்த நாகரிகத் தேசமும் இல்லை.
 இவர்களில் சிலர் அரசர், சிலர் மந்திரிகள்-ஆசிரியர் அறிஞர் குழாங்களிலும் எனக்கு நண்பர் உளர். பிரபுக் களும் என் நட்பை விரும்பவே செய்வர். நானும், 'இவர் சமூக அந்தஸ்தில் தாழ்ந்தவர்' என்று யாரையும் விலக்கி விடுவதில்லை, எனக்கு நண்பர் என்னும் ஒரே குலம்தான் தெரியும்.

-33-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/33&oldid=1299514" இலிருந்து மீள்விக்கப்பட்டது