பக்கம்:எனது பூங்கா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது நண்பர்கள்

இவர்கள் வெகு தூரத்தில் அவரவர் நாட்டில் இருந் தாலும் நான் கூப்பிட்டவுடன் - நான் மனத்தால் நினைத்து விட்டாலும் போதும் - உடனே ஒரு நிமிஷத்தில் ஓடிவந்து என் பக்கத்தில் என் கிருபாகடாட்சத்திற்குக் காத் திருப்பர். ஆகா. இவர்கள் என்னிடம் காட்டும் அன்பும் மரியாதையும்தான் எவ்வளவு !

 இவர்களைப் பகலில் மட்டு மில்லாமல் நடு நிசியிலும் அழைக்கலாம். அப்பொழுதும் இவர்கள் பிறர் போல் கண்ணைக் கசக்கிக்கொண்டே முணுமுணுத்து எழுந்து மெல்ல நகர்ந்து வருவதில்லை. நான் விரும்புகிறேன் என்று தெரியவேண்டியதுதான் தாமதம்; உடனே முகமெல்லாம் நகை பூத்து அவசர அவசரமாக வருவர். வந்தவுடன், 'எம்மை அழைத்த காரணம் என்ன ? என்று இரைய மாட்டார்கள். வந்தபின், என் அருளை நோக்கிக் கைகட்டி வாய் பொத்தி அடக்க ஒடுக்கமாக அயலே ஒதுங்கி நிற்பர். நான் ஏதேனும் கேட்க ஆரம்பித்தால்மட்டுமே பேசுவர். நான் அவர் பக்கம் திரும்பாமலே இருந்துவிட்டாலும் அப்ப டிச் செய்யலாமோ என்று கேட்கவும் மாட்டார்கள்; கோபித்துக்கொள்ளவும் மாட்டார்கள்.
 நான் கேட்க அவர்கள் மறுமொழி தரும்பொழுது நான் கோபித்தால் வருந்தமாட்டார்கள். 'பேசியதுபோதும், நிறுத்தவும்!' என்றால் உடனே நிறுத்திவிடுவர். நான் கூப்பிட்டவுடன் வருவர், வந்தவுடன் அவரைப் போகலாம் என்று கூறினாலோ, உடனே போய்விடுவர். இது நியாயமா என்று கேட்டு நிற்பதில்லை. நான் இட்டதே சட்டம். என் இஷ்டப்படி நடப்பதே அவர்கள் விருப்பமும் கடமையும் ஆகும்.

—34—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/34&oldid=1299555" இலிருந்து மீள்விக்கப்பட்டது