பக்கம்:எனது பூங்கா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது நண்பர்கள்

 சில வேளைகளில் நான் அவர்களைக் கீழே தள்ளிவிடுவ தும் உத்தரவிடுவதும் உண்டு. அப்பொழுதேனும் அவர்கள் மலர் முகம் வாடுவது உண்டோ ? கைகேயி நாட்டுக்குப் போகும்படி கட்டளையிட்டபொழுது சாகுத்தன் முகம் விளங்கியதைப்போலவே சித்திரத்தில் அலர்ந்த தாமரைக்கு நிகராக விளங்கும். அடித்தாலும் வைதாலும் எனக்குச் சேவை செய்வதிலேயே அவர்கள் கண்ணுங் கருத்துமா யிருப்பார்கள்.
 அல்லும் பகலும் என் அருகிலேயே இருக்கச் சொன் னாலும் என் உத்தரவை மீறமாட்டார்கள். என் வீட்டில் எந்தத் தாழ்ந்த இடமும் அவர்கள் மனத்தைப் புண்படுத் தாது. அவர்களுக்கு ஆகாரம், ஆடை முதலியன வேண் டாம். நிற்க இடம் கொடுத்தால் போதும். அவர்கள் விரும்புவதெல்லாம் என் அன்பு ஒன்றையே.
 வெளியே போகும்பொழுதும் அவர்களை அழைத்துப் போகலாம். பேசிக்கொண்டு வரச்சொன்னால் பேசுவர். பேசாமல் இருக்கச்சொன்னால் உடனே வாய்மூடி மெளன மாய் இருந்துவிடுவர். போகின்ற காரியத்தைப்பற்றி யோசனை கேட்டால் கூறுவர். போகின்ற இடங்களை ப் பற்றி விசாரித்தால் விடை தருவர். பொழுதுபோக்கக் கதைகள் கூறச்சொன்னால் சொல்லுவர்.
 அவர்கள் அறியாத விஷயம் ஒன்றும் இல்லை. அவர் களில் சிலர் கதை சொல்லுவர்; சிலர் கவி பாடுவர்; சிலர் சரித்திர இதிகாசங்களை விஸ்தாரமாக எனக்கு எடுத்து உரைப்பர் சிலர் வீரர்களைப்பற்றிச் சொல்லி என் இரத் தத்தை வேகமாக ஓடச்செய்வர். சிலர் என் முன் நாடகங் களை நடத்துவர். சிலர் அழகான ஒவியங்கள் தீட்டுவர்;

—35—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/35&oldid=1299601" இலிருந்து மீள்விக்கப்பட்டது