பக்கம்:எனது பூங்கா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எனது நண்பர்கள்

சிலர் சங்கீத வெள்ளத்தில் மிதக்க விட்டுவிடுவர். சிலர் தத்துவ ஞானிகள்; சிலர் விஞ்ஞான நிபுணர்.

 அவர்களில் சிலர் எனக்கு மதி மந்திரிகளாயிருப்பர். சிலர் இடித்துக்கூறும் துணைவராவர்; அதனால் என்னைக் கெடுக்கும் தகைமையவர் யார்? சாதாரண நண்பர்போல் இல்லாமல், எனக்கு இடுக்கண் ஏற்படும்பொழுது அவர்கள், உடுக்கை இழந்தவன் கைபோல், உடனே வந்து உதவுவர். சிலசமயம் வாழ்க்கையில் வழுக்கும் இடங்களில் ஊன்று கோலாய் நிற்பர்.
 அவர்கள் வாயில் அவச்சொற்கள் பிறப்பதில்லை. நல்ல, அழகான, 

அறிவான, ஆனந்தமான விஷயங்களையே அவர்கள் பேசுவர். அவர்கள் உள்ளத்திலுள்ளதில் ஒன் றையும் ஒளிப்பதில்லை. என் பார்வைக்காகத் தம் மனம் முழுவதையும் திறந்து இருண்ட இடங்களில் விள க்கும் ஏற்றிவிடுவர்.

 என் மனம் முழுவதையுமே அவர்கள் தம் வயப்படுத் திக்கொள்வர். அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவர்கள் உள்ளத்திலிருந்து எழும் உண்மையின் நாதமா யிருக்கும். அவர்கள் பேச்சினால் நான் உயர்ந்த இலட்சி யங்களை மேற்கொள்ளுவேன். உயர்ந்த விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பேன். நம் மனத்தில் நோயில்லையானால் இத் தகைய நண்பர் வேண்டியதில்லை. நம் மனநோய் தீரவேண்டு மானால் இந்த நண்பர்களைத்தவிர வேறு சிறந்த வைத்தியர் கிடையாது. இத்தகைய நண்பர்கள் கிடைக்கப்பெறாதவர் கள் பெரிய மாளிகைகளில் வசிக்கும் செல்வர்கள் ஆயினும் அவர்களைத் தரித்திரமான தனவந்தர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுக்காக இரங்கவும் வேண்டும்.

—36–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/36&oldid=1299633" இலிருந்து மீள்விக்கப்பட்டது