பக்கம்:எனது பூங்கா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எனது நண்பர்கள்

 என்ன துன்பங்கள் ஏற்பட்டாலும் - என்ன சஞ்சலங் கள் தோன்றினாலும் - அவர்கள் அருகே இருந்து ஆறுதல் மொழிகள் கூறி, உள்ளத்தில் விசேஷ ஊக்கமும் உற்சாக மும் உண்டாக்கிவிடுவர். அவர்கள் முன்னிலையில் சோர்வு, பயம் எதுவும் தோன்றா. அவர்கள் உதவியால் தேவலோகம் கூடப் போய்வரலாம்; சூரிய ஒளியில் குளிக்கலாம்; அண்ட கோடிகளிடையில் திரிந்து வரலாம்.
 என் வீட்டில் இந்த உயர்ந்த நண்பர்கள் தங்குவதற் காக ஒரு தனி அறை உண்டு. இந்த அறையை நான் பெரி யோரின் ஆன்மாக்கள் வாழும் புண்ணிய ஸ்தலமாகவே எப்பொழுதும் மதிப்பேன். இந்த அறைக்குள் நுழைந்து விட்டாலே போதும் - சுற்றிலும் அறிவு மணம் கமழும். இந்த அறைதான் என்னுடைய சர்வகலாசாலை. என் நண் பர்கள் இங்கே இருக்கும்வரை எனக்கு எளிமை இல்லை. இத்தகைய நண்பர்களைத்தான் பெரிய இராஜ்யங்களைவிட ஏற்றமுடையவர் என்று ஷேக்ஸ்பியர் போன்ற மேதாவி கள் பாராட்டியிருக்கின்றனர்.
 இவ்வளவு அபூர்வமான நண்பர்கள் எனக்கு இருப்பது கேட்டு யாரும் அழுக்காறு அடையவேண்டியதில்லை. இவர் கள் யார் என்று தெரிந்துகொண்டால் போதும், நீங்களும் அழைக்கலாம். உங்களிடமும் இதுபோலவே நடந்துகொள் வர். அப்படிச்செய்வதில் எனக்கு ஆட்சேபமும் கிடையாது.
 அவர்கள் உங்களுக்கு உதவும்பொழுதே எனக்கும் உதவமுடியும். அவர்கள் ஒரேசமயம் பல இடங்களில் இருப்பர். அவர்களுக்கு அழிவும் கிடையாது. அதனால் எனக்கும் உங்களுக்கும் ஊழியம் செய்வதுபோலவே நம் சந்ததியாருக்கும் - சந்ததியார் நம்மைப்போல் விரும்பினால்

ஊழியம் செய்வர்.

一]★[一

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/37&oldid=1299639" இலிருந்து மீள்விக்கப்பட்டது