பக்கம்:எனது பூங்கா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. LIITILIË ILITÍ? மேடுைகளிலும் சரி, கீழ்காடுகளிலும் சரி, ஒவ்வொரு நகரத்திலும் வியாபார கிலேயங்களும் உத்யோக மன்றங் களும் நிறைந்துள்ள இடம் ஊருக்கு நடுவே இருக்கும். அந்தப் பகுதிக்கே நகரம் என்று கூறுவது ஆங்கில நாட் டார் வழக்கம். அந்த நகரத்தைச் சூழ்ந்து ஜனங்களின் வீடுகள் பல பகுதிகளாக வெகுதூரம்வரை பரந்திருக்கும். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர் உண்டு. சில பகுதிகளில் தனவந்தர் மிகுந்து காணப்படுவர் : சில பகுதிகளில் தரித் திரரே பெருகியிருப்பர். இந்தப் பகுதிகளுக்கும் வெளியே, நகர்ப் புறங்களிலேயே, குபேர செல்வம் படைத்தோரும், அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகள் வகிப்போரும், ஆடம் பரத்தில் அதிமோகம் கொண்டோரும், ஆசிரியர், மருத்து வர், வக்கீல்கள் முதலியவர்களில் தலையாயவரும் வசிப்ப தைக் காணலாம். தற்காலத்தில் உலகில் அதிக விசாலமானதும், மிகக் கீர்த்திபெற்றதும், வெகு வன்மை உடையதுமான சாம் ராஜ்யம் ஆங்கிலேயர் ஸ்தாபித்துள்ளதாகும். அதற்கு உயிர் நாடி போன்ற தலைநகர் லண்டன். அதில் சமீப காலத்தில் ஒரு பெரிய கோடீச்வரப் பிரபு வாழ்ந்திருந்தார். உலகம் —38—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/38&oldid=759366" இலிருந்து மீள்விக்கப்பட்டது