பக்கம்:எனது பூங்கா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாப்பர் யார் ? - எங்கணும் கைவிரலிட்டு எண்ணக்கூடிய ஒரு சில வர்த்தக மன்னர்களில் அவர் ஒருவர். அவருக்கு லண்டனிலும் சாம் ராஜ்யத்திலுள்ள பல காட்டுத் தலைநகரங்களிலும் வியா பார ஸ்தாபனங்கள் உண்டு. அவர் வேறு பல கூட்டுகிலேயங்களில் முக்கிய நிர்வாகஸ்தராகவும் இருந்தார். உலகப் பொருளாதார நாடியின் பரிசோதனையில் மிகச் சமர்த்தர். வியாழனுக்கு சமானமான அறிவுள்ளவர். ஆனல் அவ்வளவு அறிவும் வியாபார தந்திரங்களைக் கையாளுவ கற்கே பயன்பட்டு வந்தது. அர்த்த சாஸ்திர விஷயங் களில் ஐயம் எழுந்தால், அரசாங்கமும் சரி, ஆசிரியர் களும் சரி. அவரையே அணுகுவர். செல்வ அபிவிருத்திச் சங்கங்களில் அவருக்கே உயர்ந்த பதவி உண்டு. அரசாங்கத்தார் அவருக்குப் பல கெளரவப்பதவிகளும் பட்டங்களும் அளித்திருந்தனர். ஜனங்கள் எல்லோர்க்கும் அவர் பெயர் கன்கு தெரியும். நகரசபைத் தலைவர் கூட்டும் பெரிய சபைகளில் பேசும் பெருமைபெற்ற சிலரில் அவரும் ஒருவர். நன்கொடை ஜாபிதாக்களில் அவர் பெயர் முதற் கண் தோன்றத் தவருது. உத்தியோகஸ்தரும் உன்னத பதவியிலுள்ளோரும் அளிக்கும் விருந்துகளுக்கெல்லாம் அவருக்கு நிச்சயம் அழைப்பு உண்டு. இத்தகைய மதிப்புப் பெற்றுள்ள பெருநிதிக் கிழ வருக்கு லண்டன் மாநகரின் புறத்தில் பிரமாண்டமான, கண்கவர் வனப்பு வாய்ந்த, யாரும் அரசர் அரண்மனை தானே என்று பிரமிக்கச் செய்யக்கூடிய, ஒரு மாளிகை இருநதது. அது பல நூறு ஏக்கர் விஸ்தீரணமுள்ள பூமிக்கு நடுவே கட்டப்பட்டிருந்தது. கட்டிடத்தைச் சூழ்ந்து காலேயில் சூரிய ஒளி பருகி உலவிவர நறுமணம் —39—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/39&oldid=759367" இலிருந்து மீள்விக்கப்பட்டது