பக்கம்:எனது பூங்கா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாப்பர் யார் ? வீசும் பூங்காவனங்கள், மாலையில் சந்திரனேக் கண்டு மகிழ்ந்து கதைகள் பேசி நேரங் கழிக்கப் பசும்புல் தளங் கள், கண் பகலிலும் உட்புறம் வெயில் தோன்ருவண்ணம் பலவிதமான மரங்கள் செறிந்த சோலைகளும் உள. வீட்டுக்கு வெளியே பயிலும் பல விளையாட்டுக்களுக்கு ஏற்ற பந்தடி மேடைகள் முதலியவற்றில் எப்பொழுதும் இளைஞரும் பிறரும் விநோதங்கள் கண்டுகொண்டிருப்பர். மாளிகைக்குள் உலகில் காணப்பெறும் விலையுயர்ந்த அலங் காரமான பொருள்கள் யாவும் வெகு அழகாக வைக்கப் பட்டு கேத்திரானந்தம் அளித்துக்கொண்டிருக்கும். பில்லி யார்டு விளையாடும் மன்றங்கள், நடனசாலைகள், விருங் தினரை உபசரிக்கும் விசாலமான ஹால்கள் முதலியவற் றைப் புகழாதார் இல்லை. ஒரு நாள் ஒரு நண்பர் வியாபார விஷயமாக அந்தப் பிரபுவைப் பார்க்கப் போயிருந்தார். பிரபு நண்பருக்குத் தம் மாளிகையின் விசித்திர வேலைப்பாடுகளையும், வெவ் வேறு இடங்களின் மேன்மைகளையும் காட்டி விளக்கிக் கொண்டே வந்தார். கண்பர் எல்லாவற்றையும் பார்த்து முடித்துவிட்டார். காப்பி டீ குடிக்க உட்காருவோம்' என்று தனவந்தர் கூறியபொழுது, நண்பர், எல்லாம் பார்த்துவிட்டேன். ஆனல் ஒன்றுமட்டும் பார்க்கவில்லையே ; தங்கள் புத்தக நிலையம் எதுவோ ? என்று கேட்டார். கோடீச்வரர், 'என் புத்தகங்களையா கேட்கிறீர்கள் ? அவைகள் நகரத்திலன்ருே இருக்கின்றன என்று உடன்ே மறுமொழி தந்தார். நகரம் என்றது வியாபார ஸ்தலத்தை, கணக்குப் புத்தகங்களேயும் புத்தகங்கள் என்று சொல்வதுண்டு. இந்தப் பிரபுவைவிட வேறு பாப்பர் உண்டோ ? —40–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/40&oldid=759369" இலிருந்து மீள்விக்கப்பட்டது