பக்கம்:எனது பூங்கா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனித தரிசனம்


தோடு “அடிகளே, அடியேனுக்கு ஒரு ஐயப்பாடு” என்று தெரிவித்துக் கொண்டார்.

அதற்குத் தயோஜெனிஸ் “அப்பா, உனக்கு என்ன ஐயப்பாடு ? சொல்லு கேட்போம்” என்று தமக்கு வழக்கமான கருணை நிறைந்த முறையில் கூறினார்.

“ஐயனே, வேறொன்றும் இல்லை. வெய்யில் கடுமையாக இருந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தாங்கள் விளக்கை ஏற்றிக்கொண்டு வீதி வழியே செல்வதன் காரணம் எங்களுக்கு விளங்கவில்லை. அதுதான் என் ஐயபப்பாடு” என்று அந்த மனிதர் விண்ணப்பித்துக்கொண்டார். அதைக் கேட்டதும் பெரியாருடைய முகத்தில் துயர் சுமந்த புன்னகை ஒன்று அரும்பிற்று.

“அப்பா, நீ இந்தக் கேள்வியைக் கேட்பாய் என்று அறிவேன். நான் வெகு நாட்களாக இந்த நாடு முழுவதும் மனிதனைத் தரிசிக்க வேண்டுமென்று தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்” என்று பெரியார் சொன்ன அளவில், சந்தேக நிவர்த்திக்காகச் சான்றோரிடம் வந்தவர் “எந்த மனிதனைத் தேடுகிறீர்கள்? பெயரைச் சொல்லுங்கள். நான் கூட்டிக்கொண்டு வருகிறேன்” என்று கூறினார்.

“அப்பா, எந்த மனிதனையும் நான் தேடவில்லை, மனிதனையேதான் தேடுகின்றேன். இதுவரை அவன் என் கண்ணுக்குப் புலனாகவில்லை. அதனால்தான் விளக்கேற்றிக் கொண்டு போனால் ஒருவேளை காணக் கிடைப்பானே என்று எண்ணி இந்தப் பட்டணத்தின் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறேன்” என்று தயோஜெனிஸ் கூறினர்.

-42-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/42&oldid=1392268" இலிருந்து மீள்விக்கப்பட்டது