பக்கம்:எனது பூங்கா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித தரிசனம் பிஞர். சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய வேண்டுகோளுக் கிணங்கி கேரில் வந்து அவி ஏற்றுக்கொள்வதாகச் சிவபெரு மான் வாக்களித்தார். வேள்வி முடிந்து அவி பகிரும் சமயத் --- ___. தில் மாறாயனுர் வேள்விச் சாலையில் சிவபெருமானுக்காகக் காத்துக்கொண்டு கின்ருர். பிராமணர்களும் புரோகிதர் களும் சிவபெருமானைத் தரிசிப்பதற்காக மாற நாயனரைச் சுற்றிச் சூழ்ந்து நின்றனர். அப்பொழுது திடீரென்று ஒரு வேடனும் வேடுவத்தியும் தங்கள் காய்களுடனும் பன்றி களுடனும் யாக சாலைக்குள் நுழைந்தனர். அதைக்கண்ட தும் அங்கிருந்த மறையவர்கள் எல்லோரும் அவர்களே அடித்துத்துரத்த முயன்றனர். ஆல்ை, மாற நாயனரோ தாம் நின்ற இடத்தைவிட்டு நகராமல் சிவபெருமான் வருவார் என்ற திட சித்தத்துடன் நின்றுகொண்டிருந்தார். வேடுவன் அவர் எதிரே சென்றதும் அவர் வேடுவன் கையில் அவியினைப் பெய்தார். வேடுவனுக வந்தவர் சிவபெருமானே. இதுபோல் உறுதியான ஆசை உடையவர்க்கே மனித தரிசனமும் கிடைப்பதாகும். இந்த உண்மையையே ரவீந்திரநாத தாகூரும் கீழ்க் கண்டவாறு பொருள்படும் தமது பாடல் ஒன்றில் கூறு கின்ருர். இருட்டி விட்டது. ஆனுல் இன்னும் விளக்கு ஏற்றவில்லை; m எதையோ எண்ணிக்கொண்டு தலையைப் பின் னிக் கொண்டிருந்தேன் ; அஸ்தமன சூரியன் அழகாக ஒளிவீசிக் கொண்டிருந்தான் : —48–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/48&oldid=759377" இலிருந்து மீள்விக்கப்பட்டது