பக்கம்:எனது பூங்கா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித தரிசனம் இளைஞரான பிரயாணி தேரைவிட்டு இறங்கி வந்தார் : அவள் எங்கே என்று கேட்டார். ஐயா, களைப்புற்ற பிரயாணியே. அவள் நான் தான் என்று கூறக்கூடாதா ? கூருமலிருந்து விட்டேன். * இப்பொழுதோ சாளரத்தினருகில் உட்கார்ந்து, ஐயோ ஏக்கத்துடன் திரும்பிய இளம்பிரயாணியே அவள் நான்தான் அவள் நான்தான் என்று இரவு முழுவதும் புலம்புகின்றேன். ' ஆகவே மனிதன் எப்பொழுதும் நமக்குத் தரிசனம் கொடுக் கக் காத்துக்கொண்டுதான் இருக்கிருன் ஆல்ை நாம்தான் அவனேக் கண்டுகொள்ளாமல் இருந்துவருகிருேம். அதல்ை தான் தம்மைத் தேடி அலையும் சங்கியாசியைக் குறித்துக் கடவுள் "என்னை விட்டுவிட்டு என்னைத் தேடி அலேகி ருனே என்னுடைய அடியான்' என்று வருந்துவதாகத் தாகூர் கூறுகின்ருர். 'பெரியோர்களே க்கான விரும்பினேன். அவர்களே நூல் களிலேயே காண முடியுமென்று எண்ணினேன். அவர்கள் என்னைச் சூழ்ந்து ஏழைகளிடையே நிற்பதை அறியாமல் போனேனே! பண்பாடு பண்பாடு என்று சொல்லும் நாற் கல்வியே இவ்வாறு என்னைக் காணமுடியாமல் குருடாக்கி விட்டது' என்று அமெரிக்க உளநூற்புலவர் சிகாமணி வில்லியம் ஜேம்ஸ் என்பவரும் இதையே வற்புறுத்து கின்ருர். –49–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/49&oldid=759378" இலிருந்து மீள்விக்கப்பட்டது