பக்கம்:எனது பூங்கா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

இருந்தன. ஒழுக்கத்தை வற்புறுத்துதலே இவை மேற் கொண்ட நோக்கம். ஜனவிநோதினி முதலிய பழைய பத்திரிகைகளில் இவ்வகைக் கட்டுரைகளை நிரம்பக் காண லாம். காலகதியில், இவைகள் பற்பல துறைகள்பற்றி எழுதப்பட்டன. சில கட்டுரைகள் தினசரிப் பேச்சு வழக்கினின்று மிகவும் விலகி சிறந்த உரைநடையில் அமைந்து, 'பாரா' முதலிய தொடர்நிலை நெறிகளைத் தழுவி இயற்றப்பட்டன; கருதிய பொருளை உபதேசம் போல இவைகள் விதித்துக் கூறும். வேறு சில, சுருக்கமாயமைந்த துடன், நியதியாதுமின்றி யதேச்சையாய்ச் சென்று முடிந் தன. இவற்றிலே, கருதிய பொருள் உபதேசம் போலன்றி, மக்கட் பண்புக் கேற்றபடியாயும் எளிதில் அறிந்து இன் புறத்தக்கதாயும் அமையும். இந்த இரண்டாவது வகையைச் சார்ந்தனவே இந்நூலிலுள்ள கட்டுரைகள்.

  கட்டுரை எழுதுவதென்றால் 'உயரிய நடை'யில் எழுதவேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். 'உயரிய நடை'யில் சொல் அலங்காரத்தைப் பார்க்கலாம்; அகராதியர் லன்றி எளிதிற் பொருள் விளங்காத கடினமான பதங் களைத் தரிசிக்கலாம்; எதுகை மோனைகள் நிரம்பிய சொல் லடுக்குகளை நோக்கி வியக்கலாம் ஆனால் இந்நடையில் உயிர்த் தத்துவம் மாத்திரம் காணப்படுவதில்லை. உயிர் நீங்கிய பின் பிரேதத்தை அலங்கரித்துப் பார்ப்பதைப் போல்வதுதான் இந்த 'உயரிய நடை'.
  இவ்வகை நடையில் எழுதிய கட்டுரைகளுக்கும் இந் நூலிலுள்ள கட்டுரைகளுக்கும் வெகு தூரம். இந்நூலின் கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் உயிர்த் தத்துவம் தாண்டவ மாடுகிறது. 'நடை' யென்று பெயரை வைத்துக்கொண்டு கடவாமல் ஓரிடத்திலேயே நின்று ஆற்றல் முழுவதையும் வீண் விரயம் செய்யும் உரை நடைகளுக்கு மாறாக, இக்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/5&oldid=1298867" இலிருந்து மீள்விக்கப்பட்டது