பக்கம்:எனது பூங்கா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனித தரிசனம் என்ன புண்ணியம் செய்திருந்தேனே. இந்த மனித தரிசனம் எனக்கு இந்த மாதத்தில் இரண்டு மூன்று முறை கிடைக்கும் பேறு பெற்றேன். ஒருநாள் நான் என்னுடைய காரியாலயத்திலிருந்து கடற்கரைச் சாலேவழியாக வீட்டிற் குத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். அப்பொழுது மழை பெய்துகொண்டிருந்தது. எனக்கு முன்னுல் சற்று தாரத் தில் ஒரு ஏழைக் கிராமவாசி மழையில் நனைந்து போய்க் கொண்டிருந்தார். அவர் திடீரென்று நின்று சாலையில் எதையோ பொறுக்கினர். ஏதேனும் பணம் காசு மடியி லிருந்து கீழே விழுந்து சிதறி விட்டனவோ, இவ்வளவு சாவதானமாக இந்த மழையில் பொறுக்கிக்கொண்டிருக் கிருரே என்று எண்ணினேன். ஆல்ை, அவர் பக்கத்தில் போய்ப் பார்த்தபொழுது அவர் பணங்காக எதையும் பொறுக்கவில்லை, சாலையில் கிடந்த முள் கொம்புகளைத் தான் பொறுக்கிக்கொண்டிருந்தார் என அறிந்தேன். அவர் அந்தக் கொம்புகளை ஒன்று விடாமல் பொறுக்கி அவை களைச் சாலைக்கு அப்புறம் யார் காலிலும் படமுடியாத இடத்தில் போட்டுவிட்டுப் போனுர். இவ்வளவும் சொட்டச் சொட்ட மழையில் நனைந்துகொண்டே செய்தார். இதைக் கண்டதும் தயோஜெனிஸ்-க்குக் கிடையாத மனித தரிசனம் எனக்குக் கிடைத்துவிட்டதாக எண்ணினேன். அதைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே என் வீடுவந்து சேர்ந்தேன். இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அரசாங்கக் கல்லூரிக்கு முன்னலுள்ள கடைமேடையில் கடந்து வந்து கொண்டிருந்தபொழுது பாதையின் நடுவில் ஒரு பெரிய கல் கிடந்தது. அதனுல் நான் சிறிது விலகி கடந்தேன். அதே கல்லைக் கண்டு சாலையின் ஒரத்தில் கடந்துகொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/50&oldid=759380" இலிருந்து மீள்விக்கப்பட்டது