பக்கம்:எனது பூங்கா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரத தேவியின் பாத தரிசனம் == இவர்களிலும் தாழ்ந்தோர், தரித்திரர் யார்? அவர் களிடையேதான் பாத தரிசனம் கிடைக்குமோ? அத்தகை யோரைக் காண்பது எங்கே? எப்பொழுது? இவ்வாறு நாள்தோறும் எண்ணிக் கவலையுற்றேன். பலவிதமான இடங்களுக்குப் போக எனக்குச் சந்தர்ப்பம் கிடைப்ப துண்டு. ஆனல் எங்கும் தாழ்ந்தோரைக் காண முடிய வில்லையே! பாத தரிசன பாக்கியம் எங்கு வாய்க்குமோ ? அன்னே பாரதத்தின் அழகு முடியை எளிதில் கண்டு விட்டேன். அதைக் காண நான் தேடி அலேயவில்லை. அது வாகவே நான் இருக்குமிடம் தேடிவந்து காட்சி அளித்து விட்டது. காங்கள் யாரும் மகாத்மா காந்தியடிகளுக்கு அழைப்பு அனுப்பவில்லை. பதினேந்து வருடங்களுக்கு முன். = அவராகவே எங்கள் ஊருக்கு எழுந்தருளினர்; காங்கள் கண் குளிரக் கண்டுகொண்டோம். எளிதில் காணக் கிடைத்து விட்டது திருமுடிஆல்ை அடியிணையோ? பத்து வருஷ காலம் தேடி அலைந்தும் பாக் கியம் கைகூடவில்லையே என்று பெரிதும் மனம் வருந்தி னேன். ஆனால், என் பேரதிர்ஷ்டம்! கினையாத சமயம் முன்வந்து நின்று விட்டது. அந்த அற்புதக் காட்சியை என்னென்று சொல்லு வேன் 1 ஆம், இதோ என் இறைவியின் ஜோதி அடிகள் ! தேசபக்தர்க்கும் தேடக் கிடையாத திரவியம் ! | இணேயடிகண்டதில் எல்லேயற்ற இன்பம்தான். ஆனல் அதன் கோலத்தைக் கண்டதில் முடிவிலாத் துன்பம். இன் பமும் துன்பமும் ஒன்ருேடு ஒன்று பின்னி நின்ற இந்த அதிசயக் காட்சியை எங்கே கண்டேன் தெரியுமா? -54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/54&oldid=759384" இலிருந்து மீள்விக்கப்பட்டது