பக்கம்:எனது பூங்கா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரத தேவியின் பாத தரிசனம் - - -* அதன் அருகில் சட்டி பானேகள். மற்ருெரு பக்கம் மற்றத் தட்டுமுட்டு சாமான்கள். இவை எவை என்று வர்ணிக்க வேண்டுமா ? # மாளிகைக்குள் நுழைந்தேன். அங்கே அடுப்பில்லை. பானே பண்டங்கள் இல்லை. தட்டவும் முட்டவும் சாமான் கள் இல்லே. இப்பொழுது யார் உயர்ந்தவர்? குடிலில் வசிப் பவரா அல்லது மாளிகையில் வசிப்பவரா? பன்றி தன் மனைவி மக்களுடன் யாதொரு கஷ்டமும் இல்லாமல் சந் தோஷமாகப் படுக்கலாம், புரளலாம், துரங்கலாம். ஆனல் அந்தப் பன்றியின் தலைவனே அவன் மனைவி மக்களோ? இந்தக் காட்சி ஒரு நாளும் என் இதயத்தை விட்டு அகன்றதில்லை. ஆனல் இதைக் காண அடிக்கடி எனக்கு வாய்ப்பதில்லை. ஒருநாள் சமீபத்தில் நானும் என் மனைவி யும் சில நண்பர்களுடன் காரைக்குடி பெண் பாடசாலை அருகிலுள்ள தெருவில் ஒரு காரில் போய்க் கொண்டிருந் தோம். அப்பொழுது மறுபடியும் மானுமதுரையில் அன்று கண்ட சுந்தரக் காட்சி ! அதைக் கண்டதும் என் மனைவி, ஐயோ இவர்கள் யார்? இவர்களுக்கு விமோசனம் எப்பொழுது? இதுவும் இறைவன் திருவிளையாடலோ ?' என்று துன்பக் குரலில் கேட்டாள். எங்களுடன் இருந்த ஒரு பெண்மணி, 'இவர்க ளுக்கும் ஆண்டவன் அனுதினமும் படி அளக்கவே செய் வான் ' என்று மனத்தில் எவ்விதச் சஞ்சலமுமின்றிக் கூறி ள்ை. ஆல்ை, இதைக் கேட்டு என் மனைவியின் மனம் சமாதானம் அடையவில்லை. —56–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/56&oldid=759386" இலிருந்து மீள்விக்கப்பட்டது