பக்கம்:எனது பூங்கா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. மகாத்மா கண்ட வழி இமது இந்தியா தேசம் இருருாறு வருஷ காலமாக இங்கிலாந்துக்கு அடிமையாக இருந்ததையும் அதன் காரண மாக இந்தியமக்கள் சொல்லொணு இன்னல்கள் அனு பவித்து வந்ததையும் எல்லோரும் அறிவார்கள். முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்குதல் தவா வளத்ததாயிருந்த நாடு பரம தரித்திரமாய்விட்டதை எண்ணி எண்ணித் தாதாபாய் 5ெளரோஜி போன்ற பெரி யோர்கள் கண்ணிர் வடித்தார்கள்; இந்த கிலேமையை மாற்ற என்ன செய்யலாம் என்று ஆராய்ந்தார்கள் இறுதியில் 1885-ஆம் ஆண்டில் காங்கிரஸ் மகாசபையை நிறுவி ஞர்கள். ஆயினும் தரித்திரம் அடிமையானதனுல்தானே ஏற் பட்டது, அதனுல் அடிமை நீங்கவேண்டும், சுயராஜ்யம் அமைக்கவேண்டும் என்று காங்கிரஸ் சபையைக்கண்ட பெரியோர்கள் கேட்கவில்லை. ஏதோ சில சீர்திருத்தங்களைச் செய்யவேண்டும் என்று மட்டுமே அரசாங்கத்திடம் கேட்டு வந்தார்கள். —58–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/58&oldid=759388" இலிருந்து மீள்விக்கப்பட்டது