பக்கம்:எனது பூங்கா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா கண்ட வழி விழுந்து வணங்கி, அப்பா ! அரசே! நான் மிகுந்த துன்பப் படுகிறேன், இரக்கம்கொண்டு ஆதரிக்கவேண்டும்' என்று வேண்டிக்கொள்வதுதான் அந்த வழி, அப்படி வேண்டிக் கொள்ளும் பொழுதும் அபகரித்தவனிடம் அபகரித்து விட்டீர், அது அடாது. அகியாயம் என்று கூறுதல் ஆகாது. அப்படிக்கூறினுல் அவருக்குக் கோபம் உண்டாய் விடும். அவர் மனம் இளகமாட்டார். அதனல், "எப்படியோ என்னுடைய பொருள் தங்களிடம் வந்து சேர்ந்துவிட்டது: அதைத் தாங்கள் தயை கூர்ந்து எனக்குத் தக்தருள வேண்டும்” என்றுதான் வினயமாகக் கேட்டுக்கொள்ள அதை எண்ணித்தான் அக்காலத்தில் சுயேந்திரகாத் பானர்ஜி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் 'இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உள்ள தொடர்பு இறைவனுலேயே ஏற்பட்டது என்றே கூறிவங் தார்கள். ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ்சமயத்தில் காங்கிரஸ் மகா சபையைக் கூட்டி இராஜவிஸ்வாசத் தீர்மானத்தை முதலில் எழுந்து கின்று நிறைவேற்றிப் பின்னரே தங்கள் விண்ணப்பத் தீர்மானங்களே அரசாங்கத்திடம் சமர்ப்பித் துக்கொள்வார்கள். ஆயினும் இதல்ை அவர்கள் பெற்ற பலன் யாது? அரசாங்கத்தார் ' தீர்மானங்கள் வந்து சேர்ந்தன, வேண்டு வன செய்வோம்” என்று பதிலளிப்பார்கள். ஏதோ சில சில்லரை நன்மைகளை மட்டுமே செய்வார்கள். இத்துணை யேனும் இரங்கினுர்களே என்று நம்முடைய பெரியோர்கள் மகிழ்வார்கள். அவ்வளவுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/60&oldid=759391" இலிருந்து மீள்விக்கப்பட்டது