பக்கம்:எனது பூங்கா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாத்மா கண்ட வழி யில் நாளுக்கு நாள் ஒய்ந்து மாய்ந்து நாசமாகப் போகவேண் டியது தாகு) என்று ஆண்ட்ரூஸ் ஆலோசித்தார். ஆம். அப்படித்தானே தோன்றுகிறது? இந்தியர்களிடம் ஆயுதம் இல்லை . அதனுல் சேன பலம்கொண்டு ஜெயிக்க முடியாது. ஆங்கில உத்யோகஸ்தர் மீது வெடி குண்டை எறிந்து கொல்ல நினைக்கிருர்களே பயங்கரவாதிகள், அதுவும் பயன் படப்போவதில்லை. ஓர் ஆங்கில உத்யோகஸ்தன் மடிந்தால் அந்த ஸ்தானத்தில் ஒன்பது ஆங்கிலேயர்கள் வந்து குதித்து விடுகிருர்களே. அப்படியிருக்க வெடிகுண்டால் விளையப் போவது யாது மில்லை. ஆயுதமில்லாததால் அறிவை உப யோகிப்போம் என்று காங்கிரஸ் தலைவர்கள் எண்ணுகிருர் கள். ஆனல் அவர்கள் நாற்பது வருஷகாலமாக காங்கிரஸ் சபை மூலம் விண்ணப்பங்கள் வண்டி வண்டியாக அனுப்பி யும் என்ன பலனைக் கண்டார்கள் ? ஆகவே பறிக்கப்பட்ட பொருளைப் பெறுவதற்குச் சாதாரணமாக உபயோகிக்கப்படும் இரண்டு வழிகளும் இந்தியர்களுக்குப் பயன்படுவதாக இல்லையே அப்படி யானுல் லர் ஜான் ஸிலி கூறியவாறு ஆங்கில ஆட்சியால் இந்தியா நாசமடையவேண்டியது தானுே இதுதானு கடவுள் நியதி என்று ஆண்ட்ரூஸ் எண்ணி வருக்தினர். அந்தச் சமயத்தான் காந்தியடிகள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். சோர்ந்து போயிருந்த இந்தியத் தலைவர்களையும் மக்களையும் தட்டி எழுப்பினர். - 'இழந்துபோன பொருளே அடைதற்கு நீங்கள் கூறு வது போல் இதுவரை இரண்டு வழிகளேயேதான் மேற் கொண்டு வருகிருர்கள். ஆனல் மூன்ருவது வழியும் ஒன்று —62—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/62&oldid=759393" இலிருந்து மீள்விக்கப்பட்டது