பக்கம்:எனது பூங்கா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. காந்தி கற்பித்த கலை நான் சென்னைப் பல்கலைக்கழகத்திடம் எம். ஏ. பட்டம் பெற்றவன்.எம்.ஏ என்பது மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ்என்னும் ஆங்கிலச் சொற்ருெடரின் சுருக்கம். அச்சொற்ருெடரின் பொருள் கலைகளில் வல்லவன் என்பதாகும். இதை எழுதியதும் எத்தனை கலைகளில் நீர் வல்லவர் என்று கேட்டு விடவேண்டாம்.இன்னகலைகள் என்று கூருததால் எல்லாக் கலைகளிலும் வல்லவன் என்றுதான் அர்த்தமாகும். ■ அப்படியானுல் எனக்கும் என்னைப்போல் எம். ஏ. பட்டம் பெற்றவர்கட்கும் எல்லாக்களை களையும் கற்றுக் கொடுக்கிருர்களா என்ருல் அதுதான் இல்லை. ஒருவருக்குச் சரித்திரம், ஒருவருக்குத் தத்துவம் என்று இப்படி ஒவ்வொரு வருக்கும் ஒரு கலே வீதம்தான் கற்றுக் கொடுக்கிருர்கள். அப்படியிருக்க ஏன் கலைகளில் என்று பன்மைப் பதத்தை உபயோகிக்கிருர்கள் என்று கேட்கலாம். அது எனக்கும் விளங்காத விஷயம்தான். சரி அதுதான் போகட்டும், ஒரு கலே கற்றுக்கொடுப்ப நாகக் கூறுகிருர்களே. அதையேனும் சரியாகக் கற்றுக் கொடுக்கிருர்களா ? அதுவுமில்லை. எந்தக் கலையைக் கற்றுக் கொடுப்பதாகக் கூறுகிருர்களோ அந்தக் கலே ' யைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/65&oldid=759396" இலிருந்து மீள்விக்கப்பட்டது