பக்கம்:எனது பூங்கா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி கற்பித்த ఆడిు ஹ , லிலி என்னும் உலகப் பிரசித்தி பெற்ற ஆங்கில அறிஞர் தமது 'குறிக்கோளும் வழியும்' என்னும் நாலில் கூறுகின் ருர். * காண்ட், நீட்சே, ஹெகல் என்ற ஜெர்மன் தத்துவ அறிஞர்கள் அதிகமான கீர்த்தி பெற்றவர்கள்தான். அற்புதமான அறிவு படைத்தவர்கள்தான் : ஆல்ை அவர்கள் தத்துவ உணர்ச்சி உடையவர்களாயிருந்தார் ளோ ? இல்லே. டேட்சே உணவை அளவுக்கு மிஞ்சி உண்டுவிட்டு நோயால் வருந்துவார். காண்ட் நண்பர்கள் இறக்கும் தறுவாயிலுங்கூட அவர்களைப்போய்ப் பார்க்க மாட்டார், ஹெகல் தம்முடைய தத்துவ நூலே தலை சிறந்தது என்று சாதிப்பார். | ஆகவே, பல்கலைக் கழகங்கள் பகட்டான பட்டங்கள் பலபலவாக வழங்கினும், கற்பதெல்லாம் நிற்பதற்கே என் லும் தனிப் பெரும் விஷயத்தைமட்டும் கற்றுக்கொடுக்கிருர் களில்லை. இக் காலத்தில் அதிகமான கலே வல்லார் காணப் படும் நாடு அமெரிக் கrதான். அந்த காட்டில் பிரின்ஸ்டன் என்னும் மிகச் சிறந்த பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக இருக்கிருர் விஞ்ஞான சிரோமணியான ஐன்ஸ்டீன் என்ப வர். அவர் தமது நண்பர் ஒருவர்க்கு எழுதிய கடிதமொன் றில், ஆம் கல்வியா ? கல்வியை அளவுக்கு அதிகமாகத் தான் கற்றுக்கொடுக்கிருர்கள், அமெரிக்கப் பாடசாலே களில். ஆனல் கல்வி கற்பிப்பதற்குரிய ஒரே அறிவான முறை, தம்மைப் பார்த்து மாணவர்கள் கடந்து கொள்ளு மாறு ஆசிரியர் தமது வாழ்க்கையை நடத்துவதே ' என்று கூறுகிருர், | – 69–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/69&oldid=759400" இலிருந்து மீள்விக்கப்பட்டது