பக்கம்:எனது பூங்கா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i * * H மகாத்மாவின் மாண்பு _ - -- _ யம்ாகக் கூறலாம். ஆல்ை அதுபோலவே அவர் உள்ளத்தி லும் பொய்யில்லாதவர் என்று தைரியமாகக் கூறமுடியுமா? உள்ளத்து நிகழ்வது அனைத்தையும் அணுவளவும் ஒளியா மல் உரைத்தால் தானே உள்ளத்தால் பொய்யாதவர் என்று உரைக்க இயலும்? காந்தியடிகள் அவ்வாறு உள்ளத்து நிகழ்வதையெல் லாம் அணுவளவும்.ஒளியாமல் உாைத்திருப்பதையும் காண் கிருேம். அவர் தமது வாழ்க்கையில் காணக்கூடியதாக வுள்ள நிகழ்ச்சிகளே யெல்லாம் வெளிப்படையாகப் பச்சை பச்சையாகத் தமது ஆத்மசோதனை ' என்னும் நூலில் இாட றுயிருக்கின்ருர். சென்னேயில் பாதிரியாராக இருந்த டாக்டர் ஒயிட்ஹெட் என்பவர் அந்த நாகலப்படித்துவிட்டு, ‘ ஆ, ஹா! இப்படி உள்ளத்திலுள்ள கறைகளே யெல்லாம் ஒளியாமற் கூறக் கூடியவர் வேறு யாருளர்? இவரை மகாத்மா என்று கூறு வதற்கு இந்தப் பண்பு ஒன்றே போதும்' என்று இந்துப் பத்திரிகையில் எழுதினர். ஆம் அதல்ைதான் காந்தியடிகளே மகாத்மா என்று கூறுகின்ருேம். அதனுல்தான் அவர் உலகமக்கள் அனைவ ருடைய உள்ளத்திலும் அரியாசனம் பெற்றுவிட்டார். 'சத்தியம் என்பது தமிழில் மூன்று சொற்களால் உணர்த்தப்பெறும் உள்ளத்தில் நிகழ்வதை உண்மை என்றும் வாயில் நிகழ்வதை வாய்மை என்றும், மெய்யில் நிகழ்வதை மெய்ம்மை என்றும் நம் ஆன்ருேர் வகுத்துள்ள -74–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/74&oldid=759406" இலிருந்து மீள்விக்கப்பட்டது