பக்கம்:எனது பூங்கா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சார்லஸ் அரசருக்கு மார்வெல நன்ருய்த் தெரியும். அவருடைய வல்லமையை நன்கு உணர்ந்திருந்தார். அதனுல் அவருடைய மொழிகளுக்கு அதிகமாக அஞ்சினர். அவரை வழிகவொட்டாமல் அடக்குவது எப்படி என்று பல நாட்க ளாக யோசித்து வந்தார். ஒன்றும் புலப்படவில்லை. மார் வெலின் கட்டுரைகளுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதச் சொல்ல விரும்பினர். அதற்குத் தக்க ஆற்றல் வாய்ந்த அ.விர்ை வேறு யாரும் இல்லே. ஒருவர் இருவர் இருந்தாலும் மார்வெலோடு போருக்கு கின்று தோல்வியுற விரும்ப ாட்டார். மார்வெல் எழுதுவதும் உண்மை நிறைந்ததாக இருக்கும் பொழுது அதை மறுத்துரைப்பது எப்படி? சிறையிலிட்டு வாயை மூடிவிடலாம் என்ருல், அதுவும் இயலாத காரியம். மார்வெல் சட்டசபை. அங்கத்தினர். சபையில் கெளரவ ஸ்தானம் பெற்றவர். ஜனங்களின் பிரதிநிதி. தேச மக்களால் பெரிதும் போற்றப்படுபவர். அவர் மீது கை வைத்தால் உடனே பல அனர்த்தங்கள் விளங்துவிடும். ஜனங்களைப் பகைத்து முதலாவது சார்லஸ் பட்ட பாட்டை அதற்குள் மறந்துவிடப்போமோ? ஆல்ை, இப்படியே மார்வெலை எழுதிக்கொண்டிருக்க விட்டுவிடலாமா ? மார்வெல் எழுத எழுத மக்கள் மனத் தில் ராஜத்துவேஷம் தோன்றிவிடுமல்லவா? மக்கள் கிளம்பிவிட்டால் அரசருக்குப் புகலிடம் ஏது? பழைய மன்னரைத் தலையிழக்கச் செய்த ஆலிவர் கிராம்வெல் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களில் ஒருவரல்லரோ ஆண்ட்ரூ மார்வெலும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/77&oldid=759409" இலிருந்து மீள்விக்கப்பட்டது