பக்கம்:எனது பூங்கா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரத்திற்குச் சுருக்க வழி இங்கனம் யோசித்து ஒரு நாள் சார்லஸ் அரசர் தம் பிரதான மங்திரி டான்பி பிரபுவை அழைத்து, மார்வெல் எழுதுவதைப் பொறுக்க முடியவில்லை. அவரை அடக்கிவிட வேண்டுமே, அதற்கு வழி என்ன? நீர் என்ன செய்விரோ, அறியேன். எப்படியாவது அவரை நம் வசப்படுத்திவிட வேண்டும்' என்று முறையிட்டுக்கொண்டார். மார்வெலே ஊமையாக்கி விடுவதில் அரசருக்குள்ள அக்கரை அமைச் சருக்கும் உண்டு. அரசன் அனுமதி அளித்துவிட்டதால் டான்பி பிரபு ஆனந்தமாய் மார்வெல் வீட்டைத் தேடிப் புறப்பட்டார். ஆல்ை அவருக்குக் கவிஞர் வசித்துவந்த வீடு இருக்குமிடம் தெரியாது. மார்வெல் என்ன மாளிகையில் வாழ முடி யுமோ ? அவர் பரம தரித்திார். பாடகர் கிலேமை எந்தக் காலத்திலும் அப்படித்தானே. அதோடு அவர் மக்கள் சார்பாய் கின்றவர். சர்க்கார் தயவு பெருதவர். அதல்ை அவர் ஹல் நகரத்திற்குப் பிரதிநிதியாயிருந்த முறையில், அந்தஊரார்கொடுத்த ஒரு சிறு தொகைகொண்டே அரிதில் காலங் கழித்துவங்தார். ஆதலால் அவருடைய சின்னஞ் சிறு குடிசை ஏதோ ஒர் ஒதுக்கமான மூலே முடுக்கில்தானே இருக்க முடியும். டான்பி பெரிய பிரபு, பிரதம மந்திரி. அவருக்கு ஊரிலுள்ள மூலே முடுக்குகள் தெரியுமோ ? அதனுல் மார்வெல் இருந்த வீட்டைக் கண்டுகொள்ள மிகவும் சிரமப்பட்டார். இறுதியில் வீட்டைக் கண்டுபிடித்துத் திடீரென்று உள்ளே துழைந்தார். இக்காலத்தில் பல பிரமுகர்கள்

  • h

தங்கள் அழகான மாளிகைகளை-காட்டேஸ் வில்லா —78–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/78&oldid=759410" இலிருந்து மீள்விக்கப்பட்டது