பக்கம்:எனது பூங்கா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்குவது எங்கே? இங்ானம் நடைபெற்றுவரும் நாளில் ஜெர்மனி தேசத்தில் மார்ட்டின் லூதர் என்னும் பெயருடைய ஒர் அறிஞர் இருந்தார். அவர் சிறு வயதிலேயே சகலகலாநிதி என்னும் பட்டம் பெற்றவர். எனினும் அதன் மூலம் கிடைக்கக் கூடிய புகழ், செல்வம், பதவி முதலிய அனைத் தையும் வெறுத்தார். பாவத்தில் ஈடுபட்டு வருந்தும் மக் களேப் பரமேச்வரன் பாதாரவிந்தங்களில் கொண்டு சேர்க்க விரும்பிப் பாதிரியார் வேலையை மேற்கொண்டு துறவியானுர். அவர் தினங்தோறும் பிரசங்க மாரி பொழிந்து, மக்களின் மனத்தில் பாபங்களைப் பற்றிக் கசப்பு உண்டாக்கி, அவர்களே நல்வரியில் உய்த்து வந்தார். அப்பொழுது போப்பா யிருந்தவரும் அவருடைய சீடர்களும் அறநெறி வழுவி, உலக இன்ப அனுபவங்களில் ஆழ்ந்து, களியாட்டயர்ந்து, வீண் காலட்சேபம் செய்து வந்தனர். அதல்ை அவர்களுக்குப் பெரும் பொருள் தேவை யாயிருந்தது. அதற்கு ஒரு யுக்தி செய்தனர். பாப மன் னிப்புச் சீட்டுக்கள் என்ற சிட்டுக்கள் எழுதப்பட்டன. அவற்றில் போப் கையொப்பமிட்டு, அவற்றைப் பாதிரி யார்கள் வசம் கொடுத்து, ஊர் ஊராய்ப் போய் விற்றுவர அனுப்பினர். பணம் கொடுத்து அவற்றை வாங்கி வைத் துக் கொண்டால் பாவங்கள் மன்னிக்கப்பெற்றுப் L1T LD ராஜ்யத்திற்குள் யாதொரு தடையுமின்றிப் போகலாம் என்று மக்கள் எண்ணினர்கள். இது ஒரு சுருக்க வழி அல்லவா? ஜனங்கள் இந்தச் சீட்டுக்களை ஏராளமாக வாங்க ஆரம்பித்தனர். பாவங்களே விட்டு விலகுங்கள்' என்று லுாதர் கூறினர் பாவ மன்னிப்புச் சிட்டு வாங்கி விட்டோம்' என்று மறுமொழி தந்தனர் ஜனங்கள். —83–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/83&oldid=759416" இலிருந்து மீள்விக்கப்பட்டது