பக்கம்:எனது பூங்கா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அன்று வந்த உருவம் நேற்று என்னுடைய குழந்தை தங்கத்தின் முதலாவது ஆண்டுதினம். எனக்குக் கல்யாணமாகிப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. இப்பொழுதுதான் நானும் என்னுடைய மனேவியும் குழந்தை முகம் பார்க்கும் பாக்கியம் அடைந் தோம். அதல்ை அந்த ஆண்டு தினத்தைச் சந்தோஷமாகக் கொண்டாட எண்ணி, ஆப்த நண்பர்கள் சிலரை எங்க ளோடு விருந்துண்ண வருமாறு அழைத்திருந்தேன் அவர்கள் வந்து எங்கள் தங்கத்தை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அவளோடு விளையாடினர்கள். அவள் அழகையும் மேனியையும் கண்டு மகிழ்ந்தார்கள். அவளை கன்முக வளர்த்திருப்பதாக எங்களைப் பாராட்டினர்கள். அவற்றை எல்லாம் கண்டும் கேட்டும் நானும் என்னுடைய மனேவியும் அளவிலா ஆனந்தம் அடைந்தோம். எங்கள் தங்கம் அம்மா' என்றும் அப்பா என்றும் கூறும்போது, ாங்கள் காதினிலே இன்பத்தேன் வந்து பாய்ந்த வண்ணமா பிருந்தது. அவளே என்னுடைய மடியில் வைத்துக்கொண்டு அவ ளுக்குப் பாலன்னம் ஊட்டினேன். அவள் தன்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/86&oldid=759419" இலிருந்து மீள்விக்கப்பட்டது