பக்கம்:எனது பூங்கா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று வந்த உருவம் சிறிய கைகளை நீட்டி அன்னத்தைத் தொடுவதும், அதை எடுத்து வாயில் வைக்க முயல்வதும் எங்களுக்கு அற்புதக் காட்சியாக இருந்தன. அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே நானும் என்னுடைய நண்பர்களும் சந்தோஷ மாகப் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் விாங் து உண்டு கொண்டிருந்தோம். அபபொழுது வாசலில் யாரோ வருவது போல ஒரு சத்தம் கேட்டது. அன்று நான் அழைத்திருந்த நண்பர் களில் ஒருவர் அதுவரை வரவில்லை ஆஹா அவரும் வந்து விட்டார் அல்லவா என்று சந்தோஷத்தோடு வாசற் பக்கம் திரும்பிப் பார்த்தேன். ஆனல் அது யார்? அவளை யார் இங்கே அழைத்தவர் ? அவளுக்கு இங்கு என்ன வேலே : அவளுடைய இடுப்பிலுள்ள குழந்தைக்கா இன்று ஆண்டு விழா ? கான் ஆவலோடு எதிர்பார்த்த என்னுடைய ஆப்த கண்பர் வரவில்லை. யாரோ ஒரு பிச்சைக்காரி தன்னுடைய குழந்தையைஇடுப்பில் வைத்துக்கொண்டு, வாசலைக்கடந்து உள்ளே வந்துவிட்டாள். அவள் அலங்கோலமாயிருந்தாள், அவளுடைய குழந்தை வாடி வதங்கிப் போயிருந்தது, அவள் "ஐயா! இரண்டு நாள்ாகப் பட்டினி, ஏதேனும் தர மாட் டீர்களா? இந்தப் பசலேக்கு என்னிடம் பாலில்லை, எஜ மான்களே கொஞ்சம் இரங்கமாட்டீர்களா ?” என்று கண்ணிர் வடித்துக் கொண்டு பிச்சை கேட்டாள். ஆல்ை, பிச்சை கொடுக்க இதுவா சமயம் ? ஐயோ ! சிவபூசை வேளையில் கரடி புகுந்ததுபோல் இருக்கிறதே! அவளே யார் இங்கே அனுமதிக் கவர் அப்பு nம் போ –87–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/87&oldid=759420" இலிருந்து மீள்விக்கப்பட்டது