பக்கம்:எனது பூங்கா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== i அன்று வந்த உருவம் வெளியே கில்" என்று நான் கோபித்தேன். என்னுடைய கண்பர்களும் "ஆமாம், தங்கத்தைப் பார்த்துச் சந்தோஷித் துக் கொண்டிருக்கும்போது இந்தச் சனியன்கள் எங்கிருந்து வந்து விட்டன?" என்று கூறினர்கள். அவ்வளவுதான், அந்தப் பிச்சைக்காரி பயந்து வெளியே போய் விட்டாள். ஆல்ை அவள் அந்த இடத்தை விட்டு அகன்று போன லும், அவளுடைய பரிதாபகரமான காட்சி என்னுடைய மனக்கண் முன்னுல் நின்று கொண்டே இருந்தது. அவள் வெளியேதான் கின்று கொண்டிருந்தாலும் அருகிலே உட் கார்த்திருப்பது போலவே தோன்றிற்று. ஆமாம், அவள் காங்கள் பருப்பும் பாயலமும் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிருள். ஆமாம், அவள் எங்கள் குழந்தை அன்னத்தில் கையிட்டு அளைவதைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிருள். அவளுடைய வயிறு ஒட்டித் தான் கிடக்கிறது. அவளுடைய குழந்தை வாடித்தான் உறங்குகிறது. அவளே அருகில் வைத்துக்கொண்டு விருக் துண்பது எப்படி? எனக்குச் சாப்பிட முடியவில்லை. என் லுடைய சந்தோஷம் எல்லாம் மறைந்து போய் விட்டது. ஏதோ குற்றம் செய்தவன் போல எண்ணினேன். அந்தஎண்ணம் என்னுடைய இதயத்தில் குடிகொண்டு விட்டது. அதை வெளியாக்க முயன்றேன். அவள் வரு முன் இருந்த ஆனந்தத்தை மறுபடியும் அனுபவிக்கப் பிர யத்தனப்பட்டேன். அவள் வெளியில் கின்ருல் என்ன, அருகிலேயே உட்கார்ந்து கொண்டால்தான் என்ன? அவ ளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் என்ன குற்றம் செய்து விட்டேன்? நான் என்னுடைய அருமந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/88&oldid=759421" இலிருந்து மீள்விக்கப்பட்டது