பக்கம்:எனது பூங்கா.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அன்று வந்த உருவம் செல்விக்கு ஆண்டுவிழா நடத்துவதில் எந்தச்சட்டத்தையும் மீறவில்லையே? நான் என்னுடைய நண்பர்களுக்கு விருந்து வைத்ததில் யாருக்கும் எந்த அநியாயமும் செய்துவிட வில் லேயே? நான் வேலைசெய்து தேடிய பனந்தானே நாங்கள் யாரிடமிருந்தும் திருடிக் கொள்ளவில்லையே ! அவள் யாரோ, எப்படிப்பட்டவளோ, அவளுக்கு ஏன் உதவி செய்யவேண்டும்? அவளும் என்னேப் போல வேலே செய்தால் என்ன ? அவளுடைய கணவன் அல்லனே அவளேக் காப்பாற்றக் கடமைப்பட்டவன் ? அந்தக் கட மையை நாம் ஏற்றுக் கொள்ளலாமோ ? அவளுக்கு நாம் உதவி செய்தால் அவள் இதுபோல் தானே வாழ்வாள்? அது சமூகத்துக்குத் தீங்கு செய்தது ஆகுமல்லவா ? அவ ளுக்கு இன்னும் எத்தனே குழந்தைகள் பிறக்குமோ, அவற் றையும் காம் பாதுகாக்க வேண்டுமோ ? அவற்ருல் மனித ஜாதிக்கு நன்மை உண்டாகுமோ ? இந்த விதமாக எண் ணிப் பார்த்தேன். இந்த எண்ணங்கள் நிகழும்போது, என்னிடம் யாதொரு குற்றமுமில்லை. இவளுடைய நிலை மைக்கு நான் ஜவாப்தாரியல்ல, இவளுக்கு உணவு கொடா விட்டாலும் நான் நியாயம் தவறியவன் ஆகேன் என்று தோன்றும். அதனுல் என்னுடைய மனத்தில் உண்டான குழப்பம் நீங்கிவிட்டது போலக் காணப்படும். ஆமாம், அவளைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்று முடிவு செய்வேன். அவளுடைய உருவத்தை மறந்து விட்டதாக எண்ணுவேன். அதற்கு முன் வாழ்ந்த இன்ப வாழ்வே மறுபடியும் வந்து விட்டதாக கினைப்பேன். ஆல்ை இதென்ன ? அவ்விதம் எண்ணி அரைகிமிஷம் ஆகவில்லேயே அதற்குள் அவளுடைய உருவமும் எண்ண –89–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/91&oldid=759425" இலிருந்து மீள்விக்கப்பட்டது