பக்கம்:எனது பூங்கா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவன் அமரன் ? - - _ " அவனே ஸ்ராட்போர்ட் சாலையோரமுள்ள வேலி வருகில். அவன் மானேயும் கொண்டுபோக எண்ணு விட் டால், அவனைப் பிடித் திருக்க முடியாதாம். அவன் வேலி யைத் தாண்டிக் குதித்து ஒடிப்போயிருப்பானம் " " அப்படியா? அந்தப் பயல் எங்கே? அவனைக் கொண்டுவா. ஹ-ஹூம் அந்தப் பயலுக்கு அவ்வளவு துணிச்சலா? ஆகட்டும்; அவனேக் கொண்டுவா, சொல்லு கிறேன் ” என்று ஸர். தாமஸ் லூஸி தோட்டக்காரனிடம் கூறினர். அதன்பின் தம்முடைய உடைவாளை அவர் இடை யில் தரித்துக் கொண்டு, தம்முடைய நீதி மண்டபத்துக்குச் சென்ருர் அப்பொழுது அவருடைய மனைவியும் மக்களும் வேடிக்கை பார்க்க அங்கே வந்து உட்கார்ந்து கொண் டார்கள். மாளிகைக்கு வெளியே இரைச்சல் அதிகமா யிருந்தது. மானேத் திருடிய கள்ளனே இரண்டு காவற்காரர் கள் இறுகப் பிடித்திருந்தார்கள். இறந்து போன மானே ஒரு வேலைக்காரன் துரக்கி வந்தான். இன்னுெரு வேலைக் காரன் திருடனுடைய வில்லை வைத்திருந்தான். இவர்களைச் சூழ்ந்து பலர் இறைவன் திருவுள்ளம் என்னவோ என்று பேசிக் கொண்டு வந்தார்கள். ஸர். தாமஸ் லுரளி அந்தக் திருடனேப் பார்த்தார் அவனுக்கு அப்பொழுது சுமார் இருபது வயதிருக்கும். அழகான உருவம், ஆற்றல் அமைந்த மேனி, அவனுடைய கேசம் அதிக நீளமாக வளர்ந்திருந்தது. அவனுடைய முகத்தில் அப்பொழுதுதான் மீசையும் தாடியும் அரும்பிக் கொண்டிருந்தன. அவனைக் கண்டார் யாரும் அவனைத் —94—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/96&oldid=759430" இலிருந்து மீள்விக்கப்பட்டது