பக்கம்:எனது பூங்கா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவன் அமரன் ? ஆமாம்; அவருடைய தோட்டத்தில் போய் அன்று செய்தது போல் மறுபடியும் மான் ஒன்றைக் கவர்ந்து விட்டால் போதும் அதைவிட அ வ ரு க் கு ப் பெரிய அவமானம் வேருென்றும் கிடையாது. ஆனல் அப்படிக் கவர இயலு மோ? அங்கே காவற்காரர்கள். அயராது நிற்கிருர்களே. அதோடு பிடிபட்டாலோ, அதே கதிதானே ? " ஆமாம், அதற்காகச் சும்மா. இருந்து விடுவதா? அது முடியவே முடியாது. அவருக்கு ஏதேனும் அவமானம் உண்டாக்கியே தீரவேண்டும்" என்று அந்த இளைஞன் அவன் சி று வ ைய் ப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது, ஆசிரியரைப் பற்றிக் கேலியாகச் சிலர் பாடக் கேட்டிருந்தான். அந்த விஷயம் இப்பொழுது அவனுடைய ஞாபகத்துக்கு வந்தது, அவ்வளவு தான்: அவனுக்கு உண்டான சந்தோஷத்துக்கு அளவில்லை. ஆகா! அதுதான் யோசனை! -என்று ஆனந்தம் கொண்டான். "ஆமாம்; அவரைக் குறித்து ஒரு பாட்டுச் செய்தால், அதைக் கேட்டதும் ஜனங்கள் எல்லோரும் அவரைக் குறித்துச் சிரித்துக் கேலியாகப் பேசுவார்கள். அவருக்கு மானைத் திருடில்ை கூட அவ்வளவு கோபம் வாாது” என்று எண்ணினன். ஆல்ை அவனுக்குப் பாட்டுச் செய்யத் தெரியுமோ? தெரியாது. அவன் இது வரை அந்தக் காரியத்தில் ஈடுபட் டதே யில்லை. ஆயினும் என்ன? அவர்மீது பாடித்தான் ஆகவேண்டும். அப்படியே அவர்மீது சில பாடல்களைச் –96–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/98&oldid=759432" இலிருந்து மீள்விக்கப்பட்டது