பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 75

வண்ண எழுதுகோல் வகைகள்²⁴ வண்ணச் சுண்ணக்கட்டி போல் வரைய உதவும் வண்ண எழுது கோல்கள்²⁵

அழிப்பான்கள்²⁶ மை எழுத்து மறைப்பான்கள்²⁷ செருகி பிடிப்பு ஊசிகள்²⁸ குண்டுசிகள்²⁹ இரப்பர் பேண்ட்ஸ்³⁰ ஒட்டை போடும் இயந்திர அமைப்புகள்³¹ தாள் இணைப்பான்கள்³² தாள் உறை வகைகள்³³ கோப்பு வகைகள்³⁴ அன்றாட நாட் குறிப்புகள்³⁵ நோட்டுப் புத்தகங்கள்³⁶ அலுவலகப் பைகள்³⁷ ஒட்டும் பசை³⁸ ஒட்டும் நாடா³⁹ ஒளிப்பட சட்ட அமைப்புகள்⁴⁰ என்று பல்வேறு வகைப் பொருள்கள் இந்த இடத்தில் வாங்க வசதி.

3. வால் மார்ட்¹: (ஏப்ரல் 22 அன்று இதனைக் காணச் சென்றோம்.)

இது ஒரு பல்பொருள் அங்காடி² இஃது இருபது மைல் தொலைவிலுள்ள நீண்ட தீவு³ என்ற இடத்தில் உள்ளது. இது போன்ற அங்காடிக் கிளைகள் அமெரிக்காவில் 1500 கிளைகள் உள்ளன. மாலை 4.30 மணிக்குப் புறப்பட்டுச் சென்று இரவு 8.00 மணிக்குத் திரும்பினோம். வால்மார்ட் அருகில் மருந்துக்கடை⁴, மின்சாரப் பொருட்கள்

கடை⁵,ஆடைகள் தூய்மை செய்யும் கடை⁶ என்ற மூன்று கடைகள் இருந்தன. இம்மூன்றில் நாங்கள் நுழைந்து பார்க்கவில்லை.

24. Different types of colour pencils

25. Markers 26. Rubber-Eraser 27. White art 28, Gem clips 29. Head pins 30. Rubber bands 31, Punching machines 32. Staplers 33. Envelopes

34. Files 35. Diaries 36. Note Books 37. Office bags 38. Glue 39. Cellotape 40. Photo frames ! . WAL MAR” 2. Departmental Store 3. Long Island 4. Pharmacy 5. Electricals 6. Laundry