பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 9 77

இடங்கள் என்ற இரு பகுதிகள் இருந்தன. மூடிய பகுதிகளில் இரண்டு மூன்று அடுக்குகள். இரண்டு கார்கள் செல்லும் அகலத்தில் இவ்வடுக்குகள். கார்கள் ஏறிச் செல்லும் முறையில் இந்த அடுக்குகள் அமைந்திருந்தன. இரண்டிடங்களிலும் 10 ஆயிரம் கார்கள் நிறுத்தலாம். (படம் - 19)

இப்பகுதியில் நம்மூர் சரவணா ஸ்டோர் மாதிரி (அதைவிட மிகப் பெரியவை) 4 பெரிய கடைகளும், ஐம்பது, அறுபது சிறிய கடைகளும் அமைந்திருக்கின்றன. மாஸி’ என்ற பெயர் கொண்ட கடையில் நுழைகின்றோம்.

ஆடை வகைகள் உள்ள இடத்துக்குப் போகின்றோம். கால் சட்டைகள், மேல் சட்டைகள், பனியன்கள், கோட் வகைகள், கழுத்துப் பட்டைகள் (டைஸ்), ஜீன்ஸ் வகைகள், ஒருபுறம், இங்ஙனமே மகளிருக்குரிய பல்வேறு ஆடை வகைகள் என்று ஏராளமாக அடுக்கி வைக்கப் பெற்றிருந்தன. ஒவ்வொரு வகை ஆடைகளிலும் விலை விவரம் குறிக்கப்பெற்றுள்ளன.

பல்வேறு வகை காலணிகள் - பெரியவை, பெரியவர்களுக்கு உரியவை, சிறியவர்கள், குழந்தைகளுக்கு உரியவை தனித்தனியாக வைக்கப் பெற்றுள்ளன.

பல்வேறு வகைப் பவுடர்கள், திரவவகை வாசனைத் திரவியங்கள் ஒருபுறம் ஏராளமாக வரிசையாக குவிக்கப் பெற்றுள்ளன.

கடிகார வகைகள்-சுவர்கடிகாரம், மேசை மேல் வைக்கும் கடிகாரம், கைக்கடிகாரம், சட்டைகளில் மாட்டிக் கொள்ளும் கடிகாரம் - ஆகிய பல்வேறு வகைக் கடிகாரங்கள் மற்றொருபுறம் வரிசையாகக் குவிக்கப் பெற்றுள்ளன. விளையாட்டுக் கருவிகளில், கூடைபந்து, கைப்பந்து’, டென்னிஸ்”, கால்ஃப்’, மீன்பிடிக்கும் தூண்டில்கள் போன்றவை வகை வகையாக வைக்கப் பெற்றுள்ளன.

குழந்தைகளுக்கான பல்வேறு வகைப் பிளாஸ்டிக் பொம்மைகள்; மின்கலங்களால் இயக்கி ஒடும் விளையாட்டுக் கருவிகள், ரோலர் ஸ்கேட்டஸ் வகைகள், மெல்லிய பஞ்சு அடைக்கப் பெற்ற பொம்மைகள் பலவகைகள் இருந்தன.

ஒளிப்படங்கள் அமைக்கும் பல்வேறு சட்ட வகைகள்”, பெரியனவும் சிறியனவுமான தொகுப்பொட்டிகள்’ (அனைத்தும் அதிக விலையுள்ளவை) ஏராளமாக இருந்தன.

2. Macy 3. Base Ball 4. Tennis

5. Golf 6. Batteries 7. Roller Skatting 8. Fraies 9. Albums