பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ம் என் அமெரிக்கப் பயணம்

தின்னும் வகைகளில் மிளகுமிட்டாய் வகைகள்”, சாக்லெட்டு வகைகள், விரைவாகத் தயாரிக்கும் உணவு வகைகள்’, காஃபி பொடி வகைகள், பருகுவதற்குத் தயார் நிலையில் காஃபி, ஐஸ்கிரீம்”, பிஸ்கோத்து” வகைகள் முதலியவை ஏராளம்.

பல இடங்களில் எதை எடுத்தாலும் 99 சென்ட்” என்று பல்வேறு வகைப் பொருள்கள் பல இடங்களில் குவியல் குவியலாக வைக்கப் பெற்றிருந்தன. இவற்றுள் கைக்குட்டைகள், காலுறைகள்’, சாக்லெட்டுகள், மிளகு மிட்டாய்கள், சோப்பு வகைகள், பல்பசைகள், எழுதுகோல் வகைகள், பேனா வகைகள் முதலியவை இவற்றுள் அடங்கும். (நம்மூரில் எவை எடுத்தாலும் ஒரு ரூபாய் விற்பது போல்)

இந்த வணிக மையம் சுமார் 25 ஏக்கர் பரப்புள்ள இடங்களில் அமைக்கப் பெற்றுள்ளது.

5. முக்கிய மூன்று இடங்கள்

என் தற்காலிக மூன்று திங்கள் அமெரிக்க வாழ்க்கை மூன்று முக்கிய இடங்களைப் பார்க்க வாய்ப்புகள் அளித்தன. அவற்றுள் இரண்டு அழியா வாழ்வு பெற்று மகிழ்ச்சிப் பெருக்கை நல்குவன. மூன்றாவது பேரழிவு பட்டு இடிபாடுகளுடன் தோன்றி நம்மைக் கண் கலங்க வைத்து துக்கக் கடலில் ஆழ்த்துவது.

1. எம்பயர் ஸ்டேட் கட்டடம்': ஏப்ரல் 22 அன்று சிற்றுண்டிக்குப் பின் முற்பகல் 10 மணிக்கு மின்சார இருப்பூர்தியில் புறப்பட்டுச் சென்று பிற்பகல் 2.45 மணிக்குத் திரும்பினோம். நாடோறும் முற்பகல் 9.30 மணிக்குத் திறக்கப்பெற்று, இறுதி நுழைவுச் சீட்டு இரவு 1125 மணிக்கு விற்கப்பெறும். நள்ளிரவில் மூடப்பெறும்.

நியுயார்க்கில் இப்போதைய பெரிய கட்டடம் இது தான்; மான்காட்டன் என்ற இடத்தில் இருப்பது. பல்வேறு இடங்களிலிருந்து வருவதற்கேற்ப பொழுது போக்கு வசதிகள் வாய்க்குமாறு அமைந்திருப்பது. 102 மாடிகளைக் கொண்டது; உயரம் கால் மைல். 86-வது மாடியிலுள்ள திறந்தவெளி உயர பார்வை அமைப்பு மிகுபுகழ் வாய்ந்தது. நகரத்தின் மிக நெருக்கடியான கட்டடங்களிடையே அமைந்திருக்கும் இந்த அமைப்பு இரவு-பகல் ஒய்வின்றி

10. Peppermints 1 1 . Fast Foods 12. Ice-Cream 13. Hiscuits 14. Cent 15 Socks 1. Empire State Building - கட்டட அறைகள் யாவும் பல்வேறு அலுவலகங்களாகச்

செயற்படுவன.

2. Observatory 3. 86-மாடிக்கு மேல் உள்ள 16 மாடிகளில் பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை.