பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 0 81

இவற்றையெல்லாம் பார்த்த பிறகு மின்விசை இறக்கம் மூலம் கீழிறங்கித் திரும்பும் போது மேஸி’ என்ற பல்பொருள் அங்காடியைக் காண்கின்றோம். இதன் விவரம் பற்றி வினவியதில் என்மகன் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணனை துணிவகைகள், மிதியடி வகைகள், காலணி வகைகள், கடிகார வகைகள், தங்க நகை வகைகள் (18 காரட் வரை), அழகுப் பொருள் வகைகள்”, படுக்கை வகைகள், மேசைநாற்காலி வகைகள், வீட்டுத் தேவைப் பொருள்கள் வகைகள்’, வாசனைத் திரவியங்கள்’ முதலியவை இங்குப் பெறலாம் எனத் தெரிவித்தான்.

இந்தக் கட்டடம் பற்றிய குறிப்புக்கள்: இக் குறிப்புகள் கவர்ச்சிகரமாகவும் நம் விடுப்பூக்கத்தை'த் தூண்டத் தக்கவையாயும் உள்ளன. வார விடுமுறை நாட்கள், சிறப்பு விடுமுறைகள் இவை அடங்க செயற்பட்டுக் கட்டடம் கட்டியதில் ஒரு வாரத்திற்கு 4% அடுக்குகள் வீதம் நிறைவு பெற்றன. ஒவ்வொரு நாளும் 4000 மக்கள் வீதம் பங்குபெற்று 70 இலட்சம் மணி நேரம் பணியாற்றினர்.

கட்டட அமைப்பில்: 60,000 டன் உருக்கு இரும்பு, 100 இலட்சம் செங்கற்கள், 25 இலட்ச அடி நீளமுள்ள மின்கம்பி, 120 கல் நீள குழாய், 1000 கல் நீளமுள்ள தொலைபேசி கம்பிச் சுருள், 6500 சாளரங்கள், 1860 படிகள் (இவற்றின் எடை 365,000 டன்கள்), நிமிடத்துக்கு 1400 அடி (427 மீட்டர்) வேகம் இயங்கும் 73 மின் ஏற்ற இறக்க அமைப்புகள். 200,000 கனஅடி இந்தியானா கண்ணாம்புக் கல், பல இலட்சக் கணக்கான துருப்பிடிக்காத உருக்கு இரும்பினால் வழுவழுப்பாக்கப்பெற்ற கருங்கல்”. கட்டடத்தின் உள்ளே உள்ள நடைபாதையைக் கலையுணர்வுடன் சீர்படுத்த 500+410 இலட்ச டாலர் செலவில் இத்தாலி, ஃபிரஞ்சுநாடு, ஜெர்மனி ஆகிய இடங்களிலிருந்து தருவிக்கப்பெற்ற அரிய சலவைக்கல்’. கடந்த பத்தாண்டுகட்டு மேல் பழைய நிலையிலேயே இருக்குமாறு செய்ய பராமரிப்பு செலவு 670+200 இலட்ச டாலர். கட்டட இடத்தின் பரப்பு 2.66 ஏக்கர்.

இவற்ற்ையெல்லாம் அறிந்துகொண்டு வீடு திரும்புகின்றோம். மத்திய பூங்காவைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள்ளே எழுகிறது. அதற்குரிய வாய்ப்பை எதிர் நோக்கியுள்ளேன்.

29. Macy, பல இடங்களில் இந்த அமைப்பு உள்ளது. ஆனால், அவற்றிற்கெல்லாம் இதுதான் மிகப்

பெரியது.

30. Cosmetics

31. Home appliances-TV sets, மின்சாரப் பொருள் வகைகள், சீதள அலமாரி முதலியவை.

32. Perfumes 33. Instinct of Curiosity 34. Granite

35. Rare Marble