பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 0 என் அமெரிக்கப் பயணம்

2. ரூஸ்வெல்ட் தீவு': ஏப்ரல் 15, திங்கள் அன்று இத்தீவிற்குச் சென்றோம். பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் என்பார் அமெரிக்காவுக்கு நான்குமுறை (1933-1945) தலைவராக இருந்தவர்; நான்காவது முறை பதவி காலம் முடிவதற்குள் பரமபதம் அடைந்தவர். இந்தத் தீவு ஒரு கல் தொலைவுக்கு மேல் நீளமானது. இருபுறமும் கீழாறு’ என்ற ஆறால் சூழப்பெற்றது இத்தீவு. தமிழகத்தில் உள்ள திருவரங்கத் தீவுடன் இதனை ஒப்பிடலாம். குணசேகரத்தருகில் காவிரி சிலசமயம் தன்னிடம் வரும் அதிக நீரைப் பிரித்துக் கொள்வதற்கு-கொள்ளிடம்-என்ற பெயரில் வடபுறமாகப் பிரிந்து சென்று பலகல் தொலைவிற்கப்பால் கல்லணை என்ற இடத்தில் மீண்டும் காவிரியுடன் கலக்கின்றது. அங்ஙனமே தென்புறமாகப் பலகல் தொலைவிற்கப்பால் கல்லணை என்ற இடத்தில் கொள்ளிடத்துடன் கலக்கிறது காவிரி. இவ்விடத்தில் தான் தென்திருப்பேர்நகர் (கோவிலடி)” என்ற வைணவ திவ்வியதேசம் உள்ளது. இங்கிருந்து வடபுறம் நோக்கிக் கொள்ளிடத்தைக் கடந்தால் மறுபுறம் இலால்குடிக்குக் கீழக்கேயுள்ள அன்பில்’ என்ற மற்றொரு வைணவ திவ்விய தேசத்தைச் சேவிக்கலாம். (படம் - 23)

இந்தத் தீவின் ஒரு கோடியில் கோலர் கோல்டு வாட்டர்’ என்ற பெயரில் 1000 படுக்கையுள்ள ஒரு முதியோர் மருத்துவமனையும் மற்றொரு கோடியில் 1000 படுக்கையுடன் கூடிய கோலர் மருத்துவமனை” என்ற பெயரில் மற்றொரு முதியோர் மருத்துவமனையும் உள்ளன. வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் முதியோர் இந்த மருத்துவமனைகளில் இலவசமாக இடம் பெற்றுத் தாங்கள் இறக்கும் வரை சிகிச்சை பெறுகின்றனர். தாங்கள் பதவிகளில் இருந்தபொழுது ஏராளமான வருமான வரிகள் கட்டியவர்களல்லவா ? அதற்குப் பரிசுபோல் இந்த ஏற்பாடு அமைக்கப் பெற்றது போலும்! இது தவிர தங்கள் வாழ்நாள் காலத்திலேயே தமது ஈமச் சடங்கிற்காகத் தமது சமயாசாரப்படி அதனை நடத்துவதற்கு ஈமச்சடங்ககம்’ என்ற பெயரிலுள்ள ஒருநிறுவனத்தில் தத்தமது நிலைமைக்கேற்றவாறு ஒரு தொகைக்கு ஏற்பாடு செய்து ஆயுள் காப்பீடுபோல் செலுத்தி ஈமச் சடங்கு நடைபெறுவதற்கும் ஒர் ஏற்பாடும் இருந்து வருகின்றது. இவர்கள் மரித்தபிறகு அந்தச் சடங்கை நடத்துவதற்குரிய இயக்குநர் பொறுப்பேற்று இதனைச் செய்து வைப்பார். இஃது ஒர் அற்புதமான ஏற்பாடு ஆகும்.

Roosevelt Island. Franklin D. Roosevelt (1933–45). East River இஃது அப்பக்குடத்தான் சந்நிதி என்றும் வழங்கப் பெறுகின்றது. Coler Goldwater 5. Gariotrics Hospital 6. Coler Hospital Funeral Home 8. Director