பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 0 87

விண்ணில் இயங்கும் மூன்று நகரங்களில் இருந்துகொண்டு பல இடங்களை அழித்ததாகப் புராணங்களில் படித்துள்ளோம். இதுதான் கதை. முற்காலத்தில் தாரகாசுரனுடைய புதல்வர்களான வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்னும் மூவரும் மிக்க தவம் செய்து நான்முகனிடம் வானத்தில் பறந்து செல்லும் தன்மை வாய்ந்த மூன்று பட்டணங்களை அடைந்தனர். இவர்கள் மற்றும் பல அசுரர்களோடு அந்நகரங்களுடனே தாம் நினைத்த இடங்களிலே பறந்து சென்று பலவிடங்களின் மேலும் தங்கி அவ்விடங்களைப் பாழாக்கி வந்தனர். இத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாத தேவர் முனிவர் முதலானாருடைய வேண்டுகோளினால் சிவபெருமான் பூமியைத் தேராகவும், சந்திர சூரியர்களைச் சக்கரங்களாகவும், நான்மறைகளைக் குதிரைகளாகவும் நான்முகனைச் சாரதியாகவும் மகாமேருவை வில்லாகவும், ஆதிசேடனை வில்நாணாகவும், திருமாலை வாயுவாகிய சிறகமைத்து அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும் அமைத்துக்கொண்டு போருக்குத் தயாராகச் சென்று போர் தொடங்கும்போது வெகுளிச் சிரிப்பு சிரித்து அச்சிரிப்பினின்று உண்டாகிய தீயினால் அவ்வசுரர்களை அந்நகரங்களுடனே எரித்திட்டனன் என்பது.

இதனை நினைவுகூரும் நிலையில் இந்தப்படகில் ஏறுகின்றோம்.நம்மைப் போல் ஏராளமான மக்கள் ஏறுகின்றனர். இதில் 500 பேர் ஏறிச் செல்ல இருக்கை வசதிகள் உள்ளன. கடலில் சுமார் 20 மணித்துளிகள் சென்றபோது கடலின் நடுவில் வைக்கப் பெற்றுள்ள பெண் வடிவிலுள்ள சுதந்திரச் சிலையைப் பார்த்துக்கொண்டே செல்லுகின்றோம். (படம் - 27) இச்சிலை சுதந்திரத் தீவு’ என்ற ஒருசிறு தீவினிடையே வைக்கப் பெற்றுள்ளது. இதன் உயரம் 151 அடி; 154 அடி உயரமுள்ள ஒரு பீடத்தின் மீது வைக்கப் பெற்றுள்ளது. படகில் சென்ற நாம் ஸ்டேட்டன் தீவில் இறங்குகின்றோம். படகில் செல்லும் போதே எல்லிஸ் தீவு கண்ணில்படுகின்றது. சுமார் 100 ஆண்டுகட்கு முன்னர் (படம் - 28) (1892-1954) அமெரிக்காவுக்கு வருபவர்கள் இங்குச் சோதிக்கப்பெற்று அனுப்பப் பெறுவார்களாம். இதை அறிந்து கொள்ளுகின்றோம்.

ஸ்டேட்டன் தீவில் சிறிது தொலைவு (சுமார் 100 அடி) சென்று மற்றொரு படகில் ஏறுகின்றோம். இது மான்காட்டன் தீவுக்குத் திரும்புவதற்காக

3. பெரி. திரு. 10.2.9 என்ற பாசுரத்தின் உரைக் குறிப்பில் விளக்கப் பெற்றுள்ளது. 4. Statue of Liberty. இது ஃபிரெஞ்சு அரசினரால் 1884-இல் அமெரிக்கப் புரட்சியின்போது (American Revolution) இரு நாடுகள் செய்து கொண்ட சமாதானத்தின் நினைவாக அன்பளிப்பாக வழங்கப் பெற்றது. 100 ஆண்டுகட்குமேல் இங்கு இருந்து வருகின்றது. இது நவீன காலத்தில் மிக உயர்ந்தது.

5. Liberty Island 6. Staten Island (Ferry) 7. Ellis Island 8. Immigrants