பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ) என் அமெரிக்கப் பயணம்

அமைந்த படகு. இதில் ஏறி சுமார் 20 மணித் துளிகளில் வந்த இடத்தை அடைகின்றோம். திரும்பும்போது சுதந்திரச்சிலையின் பின்புறத்தை நோக்கிய வண்ணம் வருகின்றோம். படகிலிருந்து இறங்கி மீண்டும் மின்சார இருப்பூர்தியில் ஏறுவதற்கு வரும்போது கண்ணிலான் ஒருவன் கோலுடன் தடவிக் கொண்டே வரும்போது நாய் ஒன்று அவனுக்கு வழிகாட்டிக் கொண்டு வரும் வியத்தகு காட்சியைக் காண்கின்றோம். சமூகத்திற்கு காவலர்கட்கு நன்றிக்கு எடுத்துக் காட்டுகளாக உள்ள நாய்களின் நற்றொண்டு நம் மனத்தில் குமிழிகளிட்டு நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்றது.

மீண்டும் மின்சார இருப்பூர்தியில் ஏறி சிதைவுற்றுக் கிடக்கும் உலக வாணிக மையத்தை அடைகின்றோம். வாணிக மையம் 110 அடுக்கு மாடிகளுள்ள இரண்டு கட்டடங்களில் அமைந்திருந்தது. இரண்டிலும் உலக வாணிக அலுவலகங்கள் அமைந்திருந்தன. இவற்றுடன் வேறு ஐந்து சிறிய கட்டடங்கள் இருந்தன. இவற்றில் நான்கு அலுவலகங்கள் அடங்கியவை; ஒன்று உணவு விடுதியாக செயல்பட்டது. பாஸ்டனிலிருந்து புறப்பட்ட இரண்டு பெரிய விமானங்களில் (சுமார் 200 பயணிகள் வீதம் அமர்ந்திருந்தவை) ஃபின்லேடனைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஏறி விமான ஒட்டிகளை வல்லந்தமாகத் தள்ளிவிட்டு தாம் அந்த விமானங்களை ஒட்டி வாணிக மைய இரண்டு கட்டடங்களில் பலமாக மோதுகின்றனர். விமானங்கள் இரண்டும் வாணிக மையக் கட்டடங்களில் வெடித்து கட்டடங்கள் இரண்டையும் அருகிலிருந்த ஐந்தையும் தரைமட்டமாக்கிவிட்டன. இரண்டு மையங்களிலிருந்த நூற்றுக் கணக்கான வாணிக நிறுவனங்களும் அவற்றில் பணியாற்றிய ஆயிரக் கணக்கான மக்களும் (2600) காலனுக்கு இரையாயினர்.

மற்றொரு விமானம் நியுஜெர்சியிலிருந்து புறப்பட்டுச் சென்றது. இஃது அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனிலுள்ள பெண்டகன்” வடிவிலுள்ள இராணுவத் தலைமைச் செயலகத்தைத்"தாக்கி ஒரு பகுதியைச் சிதைத்தது.

இடிபாடுகளுடன் சிதைந்து கிடந்த வாணிக மையங்களிலிருந்த இடத்தை அடைகின்றோம். இடிபாடுகளை அகற்றிக் கொண்டிருந்தனர். பல பாரந்துக்கிகள் இந்த அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தன. இடிபாட்டுப் பொருள்களை ஸ்டேட்டன் தீவில் போட்டுக் கொண்டிருந்ததைக்

9. Boston - என்ற இடம் நியுயார்க்கிலிருந்து 220 கல் தொலைவிலுள்ளது. இந்த இரண்டு

விமானங்களும் இங்கிருந்துதான் புறப்பட்டன. 10. Pentagon 11. Military Head Quarters.