பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 0 என் அமெரிக்கப் பயணம்

1825-இல் ஈரி கால்வாய்” என்பது திறக்கப் பெற்றது இரண்டாவது நிகழ்ச்சியாகும். எண்ணற்ற வாணிக-கப்பல் போக்குவரத்து வசதிகளை இந்தக் கால்வாய்கள் ஒன்று சேர்க்க வாய்ப்பளித்தமையால், பெரிய ஏரிப்பகுதி’, கனடா, கிழக்கு ஒன்றிணைந்த மாநிலங்கள்” ஆகியவற்றிடையே கப்பல் வாணிகம் நடைபெறும் இடமாக பஃப்பலோ நகர் வளர்ந்தது.

இவ்வாறு பன்முக வளர்ச்சியுடன் திகழும் நகரின் ஒரு பகுதியில் வாய்ப்பாக அமைந்துள்ள இந்த நயாகரா அருவிகளைப் பார்க்க மே 31-ஆம் நாள் (2002)-வெள்ளி, காலை 7.15 மணிக்குப் புறப்பட்டோம்.நாங்கள் இருப்பது நியுயார்க்கேயாயினும் நயாகரா அருவிகளை அடைய 430 கல் தொலைவைக் கடந்தாக வேண்டும். அப்படிக் கடந்து செல்லும்போது அடுத்த மாநிலமாகிய பென்சில் வேனியா மாநிலத்திலும் நுழைந்து செல்ல வேண்டிய நிலை. மாலை 4.00 மணிக்கு எங்கள் அரிய நண்பர் டாக்டர் தனஞ்செயன் (திருப்பதியைச் சேர்ந்தவர்; இருபத்தைந்து ஆண்டுகட்கு முன் அமெரிக்கா வந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர்) இல்லத்தை அடைந்தோம்”.

சிந்தனையோட்டம்: நயாகரா அருவிகளைப் பார்க்கநினைக்கும்போது என் சிந்தனையோட்டம் 1940-களுக்குத் தள்ளப் பெறுகின்றது. நாடு விடுதலை பெறுவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளில் (1945-47)நடைபெற்ற நிகழ்ச்சிகள் குமிழியிடுகின்றன. அக்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றோரம்’ என்ற தலைப்பில் சொற்பொழிவுகள் நிகழ்த்திய அறிஞர் அண்ணாதுரைதுறையூருக்கு வந்தார்.அக்காலத்தில் சுயமரியாதை, காங்கிரசு, பொதுவுடைமைக் கட்சிகள் மட்டும் இருந்தன. தந்தை பெரியாருக்குச் செல்வாக்கு மிகுந்திருந்தது. அதனால் அவ்வூரில் சுயமரியாதைக் (தன்மான இயக்கம்) கட்சிக்கு மதிப்பு மிகுந்திருந்தது.

“ஆற்றோரம்’ என்ற தலைப்பிலேயே இங்கு பேசுமாறு வேண்டிக் கொண்டதற்கிணங்க, பேசினார். ஊரே திரண்டு வந்தது போன்ற பெருங்கூட்டம், பள்ளியில் 750 மாணவர்கள், ஊர்ப் பெருமக்கள் 500-க்கு மேல். உலகில் உள்ள நாகரிகங்கள் யாவும் ஆற்றோரங்களில் வாழும் மக்களிடையேதான் தோன்றி வளர்ந்தன என்று கூறி ஆஃபிரிக்காவில் நைல்நதி, அமெரிக்காவில் நயாகரா, இங்கிலாந்தில் தேம்ஸ், நம் நாட்டில் கங்கை, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, பொருநை நதிகளை எடுத்துக் கூறி விளக்கினார். இந்நிலையில் நயாகரா மனத்தில் எழுகின்றது! இந்நிலையில்,

14. Eric Canal 15. Great Lakes region

16. Eastern United States

17.55, Halston Parkway, East Anherest, New York 1405, USA (716-688-4146).

இந்தஇடம் பஃப்பலோ மாநகரிலுள்ள ஒரு சிறு பகுதி.