பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 ♦ என் அமெரிக்கப் பயணம்

அற்புதமாகக் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தன. இந்த அழகுகட்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்த மாதிரி அருவிகள் திகழும் வான மண்டலம் முழுவதும் கவிந்து மூடும் வண்ணம், உள்ளத்தையீர்க்கும் வண்ணம் பல்வகை வாண வேடிக்கைகள் காட்டப் பெற்று பார்ப்போரை மருளும்படி செய்தன. சில காட்சிகளை நாங்கள் ஒளிப்படங்களாக எடுத்து வைத்துள்ளோம். (படம் - 30, 31, 32, 33)

இக்காட்சிகளைக் கண்ட கவிஞர் பெருங்கவிக்கோ தம் கவிதைகளில் கூறுவனவற்றையும் உங்கள் முன் வைக்கின்றேன்.

அக்கரை கனடா ஆட்சி!
       இக்கரை அமெரிக் கர்க்காம்!
சொக்குபே ரின்ப மாட்சி
       தொடர்ந்திடும் இருபு றத்தும்!
தக்கநல் விளக்கொ ளிகள்
       தனியொளி பாய்ச்சும்! ஏரார்
பக்கங்க ளெல்லாம் பச்சை
       படர்ந்திடும் இருளை வென்று (1)

இருகரை நடுவில் ஓடும்
       இணையிலா வேகம் ஆற்றின்
பெருநதி நீர்நிலைகள்
       பேராளம் இருநூற் றுக்கும்
வரும்படி மேலாம் சூழ
       வளமைசால் குன்றக் கோலம்!
மருவிலா அற்பு தங்கள்!
       மலைவளம் அலையின் வேகம்! (2)

இரவிலே ஒளிவீச் சுக்கள்
       இருமுப்பத் தின்மூன் றாகும்!
கரவிலார் நெஞ்சம் போலக்
       கனடாவின் வண்ணம் பாடும்
இரவலர் போலச் சூழ்ந்த
       இருளதோ கெஞ்சிப் பெற்று
பரமனின் இயற்கைக் கோ! ஓ!

       பயன்புதுப் பாதை காட்டும்! (3)