பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 ♦ என் அமெரிக்கப் பயணம்

வாழ்ந்திட வேண்டும் மேக
       மண்டலம் செல்ல லைப்போல்
ஆழ்ந்திட எழும்பிச் செல்லும்

       அடடா! அழகென் னே!ஆ.!?[1] (14)


மின்விசை தூக்கியின் மூலம்[2] ஆற்றின் மட்டத்திற்கு இறங்கினோம் (சுமார் 180 அடி). கவிஞர் பாணியில் சொன்னால்.

தூக்கியின் கீழி றங்கித்
       தொடுகரைப் படகில் ஏறி
காக்கவே இரப்பர்ச் சட்டை
       கையேற்று மாட்டிக் கொண்டு
மீக்கெழும் ஆவல் உந்த
       மீதூர்ந்த அருவி பாய்ந்து
ஊக்கிடும் திசையை நோக்கி

       உட்புகுந் திட்டோம் ஆ!ஆ! (15)

என்பதாக அமையும். வழங்கியது இரப்பர் சட்டையல்ல. பாலிதீனாலான மெல்லிய போர்வை போன்றது அது. நூற்றுக்கணக்கான பேர்களை ஏற்றிக் கொள்ளவல்ல பெரிய படகில் ஏறிக் கொண்டோம். படகு மெதுவாக அருவிகளை நெருங்கி வந்தது. மிகவும் அருகில் நகர்ந்து சென்றது. மூன்று அருவிகளையும் நனைந்து கொண்டே கண்டு அனுபவித்தோம். இது கிட்டற்கரிய அற்புதமான அனுபவம். இதனைப் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் வாக்கில் கூறுவேன்.

புதுமணப் பெண்பொ ருள்கொள்
       ‘பிரைடெ’னும் நயாக ராதான்
கதுமெனும் ஒலியி லார்த்து
       கதிவிழும் வேகம் காட்டி
விதுவிதிர்த் திடவே வீழும்
       வேகமோ அதிவே கம்!ஆ!
முதுமைகொள் மின்னல் ஆற்றல்

       முழுவேகம் வெல்லும் அம்மா! (1)

  1. அமெரிக்காவில் பெருங்கவிக்கோ - பக்.288
  2. Elevator

27. அமெரிக்காவில் பெருங்கவிக்கோ - பக் 289-298, 304.