பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 99

விரைந்திடும் விமானம் சூழ்ந்த
      வெண்பொதி முகிலி றங்கி
விரைவுடன் திரித லைப்போல்
      வெண்ணுரை படரும், தூரல்
இரைத்திடும் நயாக ராவை
      எதிர்த்திடர் வெல்லும் ஓடம்!
கரைகாணா வெள்ளம் மோதும்!
      காட்சியின் மாட்சி! ஆ!ஆ! (10)

அம்மம்மா! என்ன மாட்சி
      அடடா ஓ! வியப்பின் ஆட்சி
விம்மியே இயற்கைத் தாயாள்
      வேதனை கொண்ட போதில்
தம்விழி வடித்த நீரின்
      சாயலைக் காட்டி னாளோ?
செம்மணித் திறளோ? இங்கே
      சிதறின? என்ஈ தென்னே? (11)

நெடிய அவ் வருவி வீழ்ச்சி
      நெருக்கிடும் ஓடம் அங்கே
கொடியதோர் தீமை வீழ்த்திக்
      குருதியை வெண்மை ஆக்கிப்
படிமிசை கொணர்ந்து மாந்தர்
      பண்ணாதீர் வஞ்சம் என்றே
குடிகளுக் கறிவித் தல்போல்
      குவியலாய் அருவி வீழும்! (12)

மலைமழை அணிந்தி ருந்த
      மண்டிடும் படகோ ரத்தின்
தலைமுகம் குவித்துக் கண்கள்
      தான்பார்க்க விரும்ப, ஏலா
நிலையாக இரைக்கும் வாரி
      நிலைகொளா வகையுள் ஓடம்
அலையெறி ஆற்றின் போக்கில்

      அணிபெறச் செல்லும் அம்மா! (13)