பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 ♦ என் அமெரிக்கப் பயணம்

மேற்றிசைக் கதிரோன் செல்ல
      வெயில் முகம் அருவி வீழ
போற்றிசை பாடும் இன்பப்
      பூரிப்பில் குதிக்கும் விஞ்சும்
ஆற்றல்நீர் வான வில்லின்
      அழகினைக் காட்டு மம்மா!
தோற்றெழில் ஏழு வண்ணத்
      திருக்கோல மாட்சி என்னே! (14)

எட்டரை மணி இர வுக்கும்
      எழில்கொழி அருவி காண
பட்டொளிக் கற்றை காட்டும்
      பரிதியும்! விட்டெறிந்த
மொட்டுக்கள் சிதறா வண்ணம்
      மொத்தமாய் நெய்த வெண்மைப்
பட்டுபோல் இயற்கைத் தாயாள்
      படத்திக்கொண் டேயி ருப்பாள்! (15)

புகைமண்ட லத்தி னுள்ளே
      புகுந்திடும் விமானம் போலே
மிகைகொளப் படகு பாய்ந்து
      மிக்கெழும் திவலை யுள்ளே
நகைகொண்டு சிரிக்கும் வேக
      நடைமகள் அருவி விஞ்சி
பகைசாடி விரட்ட லைப்போல்
      படகினை விரட்டும் அம்மா! (16)

பச்சைப்பட் டுடுத்திக் கொண்டு
      பரதம்செய் இயற்கைத் தாயாள்
இச்சையாய் நகைக்கும் போதில்
      ஈங்கெழுந் தேசித றும்அப்
பச்சரி சிப்பல்லின் தோற்றம்
      பன்முத்துக் குவியல் குப்பை
எச்சரித் தேவீழ் கின்ற

      எழில்கலச் சின்னம் ஈதோ? (17)