பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை ♦ 103

நூற்றுஎண் பதிஅடிக்கும்
       நுண்மலை மேலி ருந்து
காற்றினால் உதவி கொண்டு
       கவினெலாம் உண்டு பள்ளப்
பேற்றினை விரும்பும் ஆவல்
       பெற்றிமை கற்றுக் கொண்டு
ஆற்றினை அடையும் வேகம்
       அம்மம்மா சொல்லப் போமோ! (26)

புவனநீ ரோட்ட மொன்றாய்ப்
       பொலிந்திடும் நிலைஈ தோ!ஆ!
தவம்தொடர் தண்ணீ ராகித்
       தாரணி வந்த தாமோ?
சிவபெரு மானின் கங்கை
       சிற்றாறு இதைஒப் பிட்டால்!
எவனம்மா இதைப்ப டைத்தான்
       என்னடா கனடா வீழ்ச்சி! (27)

தூக்கிக்கீழ் நோக்கி ஆற்றைத்
       தொட்டிடப் படகு சென்று
தாக்கலை மீறி வென்று
       தனிஓடம் அருவி மோதப்
போக்கிடும்! உயரப் பார்த்தால்
       பொதிவெள்ளிக் கட்டி, கட்டி
ஆக்கமாய்த் தொடங்க விட்ட
       அழகினை வெல்லு தம்மா! (28)

ஆப்பிரிக் காநீர் வீழ்ச்சி
       ஆயிரம் அடிக்கு மேலே
மாப்பெரி தாக வீழும்
       மதிவிக்டோ ரியாவென் னும் அக்
காப்புல அருவிக் கோலம்
       கவிஞர்க்கோ நயாக ராவின்
மூப்பினுள் அடக்க மென்று

       முறைகண்டார் அறிவா ரம்மா! (29)